இசை மருத்துவர் யுவனுக்கு டாக்டர் பட்டம் – அதுவும் எந்த யூனிவர்சிட்டி கொடுத்திருக்கு பாருங்க.

0
352
yuvan
- Advertisement -

யுவன் சங்கர் ராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று. இளையராஜாவுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான். ஆனால், இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான். இவர் தன்னுடைய 16 வயதிலேயே இசைத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானது சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் தான்.

- Advertisement -

யுவன் இசை பயணம்:

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 2015ஆம் ஆண்டிலே சொந்தமாக தயாரிப்பு ஸ்டுடியோவையும் நடத்தி வருகிறார். தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருந்த விருமன் படத்தில் யுவன் சங்கர் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருக்கிறார்.

விருமன் படம்:

கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

யுவன் இசை அமைத்து இருக்கும் படம்:

அது மட்டும் இல்லாமல் சினிமா துறையில் 25 ஆண்டுகளைக் கடந்து இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை யுவன் பிடித்திருக்கிறார். மேலும், சமீபத்தில் தான் யுவன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தற்போது யுவன் அவர்கள் விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன், லவ் டுடே போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

யுவனுக்கு கிடைத்த கௌரவ படம்:

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ பட்டம் வழங்கி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரபல விஞ்ஞானி டாக்டர் வி பாலகுரு ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement