சுவர் இடிந்து 10 பேர், கூட்டத்தில் சிக்கி 6 பேர் – யுவன் நிகழ்ச்சியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவ மாணவிகள். வீடியோ இதோ.

0
516
yuvan
- Advertisement -

கோயம்புத்தூர் தனியார் கல்லூரியில் நடந்த இசை கச்சேரியில் யுவன் சங்கர் ராஜாவை காண வந்த கூட்டத்தில் சிக்கி ஆறு பேர் படுகாயம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக யுவன் ஷங்கர் ராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று. இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.

-விளம்பரம்-

இவர் 16 வயதிலேயே இசைத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானது சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் தான். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் இதுவரை 125 படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டிலே சொந்தமாக தயாரிப்பு ஸ்டுடியோவையும் நடத்தி வருகிறார்.

- Advertisement -

யுவன் இசை பயணம்:

சினிமா துறையில் 25 ஆண்டுகளைக் கடந்து இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை யுவன் பிடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருந்த விருமன் படத்தில் யுவன் சங்கர் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருக்கிறார். கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது யுவன் அவர்கள் விஷாலின் லத்தி, தனுஷின் நானே வருவேன், லவ் டுடே போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

கல்லூரி விழா:

சமீபத்தில் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவில் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா நடத்திய இசைக்கச்சேரியில் மாணவிகள் படுகாயம் அடைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் சின்ன வேடம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள எஸ் என் எஸ் ராஜலக்ஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது ஆண்டு விழா நடந்தது.

-விளம்பரம்-

படுகாயம் அடைந்த மாணவிகள்:

இந்த விழாவை ஒட்டி கல்லூரிக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை விருந்தினராக வரவழைத்து இருந்தார்கள். மேலும், யுவன் சங்கர் ராஜாவை காண முதலில் வந்த மாணவ, மாணவிகள் 5000 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதற்கு பிறகு வந்த 2000 பேர் அனுமதிக்கப்படவில்லை. கல்லூரி வளாகத்திற்கு வெளியேவே தடுத்து நிறுத்தி இருந்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். அப்போது ஐஸ்வர்யா, நந்தினி, ஹரணி என்ற மூன்று மாணவிகள் கீழே விழுந்து இருக்கிறார்கள். அவர்களை ஏறி மிதித்துக் கொண்டு மாணவ, மாணவிகள் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள்.

பலத்த காயம் ஏற்பட்ட போலீஸ்:

மாணவிகள் மூன்று பேரும் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின் கல்லூரியின் நுழைவாயிலில் வந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் காரை பார்த்தவுடனே காருக்கு பின்னால் மாணவர்கள் கூட்டம் முந்தியடித்துக் கொண்டு சென்றது. அப்போது நுழைவாயிலின் முன் பகுதியில் இருந்த காவல் நிலைய பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரை கீழே தள்ளிவிட்டு மாணவர்கள் நுழைந்திருக்கின்றார்கள். இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கல்லூரியில் நடந்த சம்பவம்:

பின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மேடையில் பாடத் தொடங்கினார். உடனே மைதானத்தில் இருந்த மாணவ, மாணவிகள் அனைவருமே ஒன்று சேர்ந்து கூச்சல் போட்டு அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தார்கள். இதில் பத்தாம் வகுப்பு மாணவியும், கல்லூரி மாணவனும் கீழே விழுந்து படுகாயம் அடைந்திருக்கிறார்கள். மேலும், சுவர் விழுந்து சில பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

Advertisement