இந்தியாவை விட்டு ஒழித்துக்கட்ட வேண்டிய இரண்டு விஷயங்கள். ஒன்று கொரானா மற்றொன்று ? அப்துல் காலிக் பதிவு.

0
26887
yuvan
- Advertisement -

கொரோனா வைரஸில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அனைத்து நாட்டு அரசுகளும் தீவிரமாக உயிரை கொடுத்து போராடி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 4067 பேர் பாதிக்கப்பட்டும், 109 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸை தடுக்க மோடி அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும், பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து உரையாற்றி இருந்தார். அதில் அவர் கூறியிருந்தது ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு ஒன்பது நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அனைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் அனைவரும் நேற்றிரவு 9 மணி 9 நிமிடங்கள் இந்தியா முழுவதும் பல்புகளை அணைத்து அகல் விளக்கு, மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி மூலம் ஒளி காட்டி இருந்தார்கள். அதிலும் ஒரு சில பேர் நேற்று தீபாவளி பண்டிகை போல வெடி வெடித்து கொண்டாடி இருந்தார்கள். விளக்குகளை ஏற்றும் சாக்கை வைத்து நிறைய பேர் சாலையில் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நியூஸ் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. நாட்டின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் ஒரு சில பேர் பண்டிகை போல் கொண்டாடி இருந்தார்கள். வெளியில் வரக்கூடாது என்று சட்டம் போடப்பட்ட நிலையில் அனைவரும் நேற்று இரவு விளக்கை ஏற்றி வைக்கலாம் என்று சொல்லி தெருக்களிலும், வீடுகளின் முன்பும் கும்பல் கும்பலாக நின்று இருந்தார்கள்.

இதனாலேயே நிறைய பேருக்கு கொரோனா பரவி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தார்கள். இந்நிலையில் இது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பது, இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட வேண்டியது இரண்டு விஷயங்கள் தான். ஒன்று கொரோனா,இன்னொன்று முட்டாள்தனம். நிறைய பேர் அறிவியலையும் மூடநம்பிக்கையாக மாற்றி விடுகிறார்கள் என்று கூறி உள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு சில பேர் ஆதரவு தெரிவித்தும், சில பேர் விமர்சித்தும் வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறி இருந்தார். மேலும், தனது பெயரை அப்துல் காலிக் என்றும் மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement