தமிழ் சினிமாவில் இசை ஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.
அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்ட யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.
யுவன் ஷங்கர் ராஜா மூன்றாம் திருமணம் செய்துகொள்ள தான் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் கூட யுவனின் மனைவியிடம் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டதற்கு, என் கணவர் எனக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை, அதை அவரிடமே கேளுங்கள் என்று கூறிவிட்டார். ஆனால், இஸ்லாம் மதத்தை தான் தேர்ந்தெடுத்த காரணம் குறித்தும் தனது அம்மா குறித்தும் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
இசை என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு ஒரு சக்தியாக இருந்தது என் அம்மா தான். அவர்கள் இறந்த பின்னர் எனக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது குரான் தான். என்னுடைய தேடலுக்கும் நான் நம்பிக்கை இழந்து இருந்த போது என் நம்பிக்கைக்கும் எனக்கு அதில் பதில் கிடைத்தது. மேலும், இன்னும் ஆழமாக சொல்லப்போனால் நான் என் வாழ்க்கையில் குடித்ததே இல்லை. ஆனால், இடையில் ஒரு மூன்று மாதம் குடி மற்றும் புகை பிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஆனால், எனக்கு தெரியும் இது நான் இல்லை என்று எனக்கு தோணும். பின் எனக்குள் ஒரு எண்ணம் வந்தது. இது இப்படியே போனால் நாம் சம்பாதித்த அணைத்து பெயரும் புகழும் நான் இழந்து விடுவேன் என்று எண்ண ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், என்னை பொறுத்தவரை நாம் உயிரோடு இருக்கும் வரை முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.