பட வாய்ப்பே இல்லாமல் இருந்த யுவனுக்கு அஜித் கொடுத்த வாய்ப்பு- சம்பவம் செய்த யுவன், எந்த படம் தெரியுமா?

0
194
- Advertisement -

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அஜித் தனக்கு செய்த உதவி குறித்து கூறியிருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று. மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரின் இசைக்கும், குரலுக்கும் என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

யுவன் சங்கர் ராஜா முதன் முதலில் 1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அரவிந்தன்’ என்ற படத்தின் மூலமாக தான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதற்குப் பின்பு, 1999 ஆம் ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்களில் இசையமைத்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இசை அமைத்த படங்கள் ஓடவில்லை என்றாலும், இவரின் பாடல்கள் மக்கள் மத்தியில் பேசும் அளவில் இருந்தது. பின் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் பிரேக்கில் இருந்த யுவன் சங்கர் ராஜாவிற்கு கை கொடுத்தது அஜித்தின் ‘தீனா’ என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

யுவன் சங்கர் ராஜா பேட்டி:

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார். அதில் அவர், ‘ முதலில் நான் படம் ஓடவில்லை என்றால் நான் என்ன பண்ண முடியும் என்பது போல் கருத்தில் இருந்தேன். ஆனால், ஒரு சமயம் கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்று நினைத்தேன். அப்போ தான் கரெக்டா அஜித் சார் வந்து, யுவன் இந்த படம் நீ தான் பண்ண வேண்டும் என்று சொன்னார். உன்னை நான் பார்க்க வேண்டும் என்று அவரே வீட்டுக்கு வந்து இதை சொன்னார். நான் உனக்கு ஒரு படம் கொடுக்கிறேன். அதில் உன்னுடைய பெஸ்ட் நீ கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

அஜித் செய்த உதவி:

மேலும் அதில், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திற்கு பிறகு மூன்று,நாலு வருடங்களுக்கு எனக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அந்த ஆல்பம் நல்ல ஆல்பம் இருந்தால் கூட. அந்தப் படம் ஒழுங்காக ஓடவில்லை. அப்ப தான் எனக்கு அஜித் சார் சொன்ன ‘தீனா’ பட வாய்ப்பு கிடைத்தது. தீனா படத்தோட துள்ளுவதோ இளமை படமும் வந்தது. அங்கிருந்துதான் என்னுடைய பயணம் தொடங்கியது என்று கூறியுள்ளார். ‘தீனா’ படத்தில் தான் முதன் முதலாக யுவன் சங்கர் ராஜா அஜித்குமாரின் படத்திற்கு இசையமைக்கத் தொடங்கினார்.

-விளம்பரம்-

அஜித் – யுவன் கூட்டணி:

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான தீனா படம் அஜித் திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் மூன்று பேருக்கும் பெருமையை சேர்த்தது. இந்தப் படத்திற்குப் பிறகு யுவன் துள்ளுவதோ இளமை, ஏப்ரல் மாதத்தில், மௌனம் பேசியதே, வின்னர், காதல் கொண்டேன், பேரழகன், 7ஜி ரெயின்போ காலனி என்று பல வெற்றி ஆர்வல்களை கொடுத்தார். தீனா படத்தைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அஜித் உடன் இணைந்து ஏகன், பில்லா, ஆரம்பம், மங்காத்தா, பில்லா 2, வலிமை போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

யுவன் இசையமைக்கும் படங்கள் :

இதில், வலிமை படத்தை தவிர மற்ற அனைத்து படங்களின் பின்னணி இசையும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் பிஜிஎம்களை உருவாக்கியவர் யுவன் சங்கர் ராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக, யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மக்களிடையே கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அதைத்தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா கூடிய விரைவில் வெளியாக இருக்கும், ஏழு கடல் ஏழு மலை, நேசிப்பாயா, ஸ்வீட் ஹார்ட் போன்ற படங்களில் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement