தன்னைப் பற்றி தவறாக விமர்சித்த இணையவாசிக்கு மறைந்த நடிகர் நேத்ரன் மகள் அபிநயா கொடுத்திருக்கும் பதிலடிதான் தற்போது இணையத்தில் வைரல் ஆகில் வருகிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நேத்ரன். இவர் சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு டான்ஸரும் ஆவார். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். இவர் முதன் முதலாக ‘மருதாணி’ என்ற சீரியலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சேனல்களில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருந்தார்.
மேலும், இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து இருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சீரியல்கள் தான். இவர் சீரியல் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று இருந்தார். குறிப்பாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ ஜோடி நம்பர் 1′ என்ற நடன நிகழ்ச்சியில் நேத்ரன் மற்றும் அவருடைய மூத்த மகள் அபிநயா கலந்து இருந்தார்கள்.
நேத்ரன் குறித்த தகவல்:
இப்படி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் மீடியாவில் பயணித்துக் கொண்டிருந்தார். இதனிடையே இவர் தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். மேலும், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் அபிநயா ‘கனா காணும் காலங்கள்’ என்ற வெப் சீரிஸில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய இரண்டாவது மகள் அஞ்சனா ‘ரேவன்’ என்னும் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.
நேத்ரன் மறைவு :
இந்நிலையில் தான் நடிகர் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். தனது அப்பா ஐச யூ வில் இருப்பதாகவும் விரைவில் மீண்டு வருவார் எனவும் அவன் மகள் அபிநயா இணையத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி, சிகிச்சை பலனின்றி நடிகர் நேத்ரன் உயிரிழந்தார். அவரின் மறைவு அவர்களது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரையுலகினர் பலரும் அவரின் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.
சமையல் வீடியோ:
கடந்த ஆறு மாதங்களாகவே தனது அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடியதை பார்த்த மகள்கள் இருவரும் தற்போது மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில், நேத்ரனின் மூத்த மகள் அபிநயா சமையல் செய்து ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அதற்கு இணையவாசி ஒருவர், அப்பா இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பணத்திற்காக இப்படி பிரமோஷன் வேலைகளில் இறங்கி விட்டீர்களா. நீங்கள் ரொட்டி செய்வதை எல்லாம் எங்களால் பார்க்க முடியாது என்று கடுமையாக கமெண்ட் செய்திருந்தார்.
அபிநயா கொடுத்த பதிலடி:
இணையவாசியின் பதிவை பார்த்த அபிநயா, நாங்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நாங்கள் எப்படி இருக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். எவ்வளவு சோகம் மனதில் இருந்தாலும், உயிர் வாழ்வதற்கு சாப்பிட்டு தானே ஆகவேண்டும். நாங்கள் சாப்பாட்டிற்கு தான் ஃபுட் ரெடி பண்ணி கொண்டு இருந்தோம். அப்படி இருக்கும்போது எங்களது விஷயத்தில் நீங்கள் கருத்து சொல்லது ரொம்ப தவறு என்று பதிலடி கொடுத்துள்ளார். அபிநயாவின் இந்த தைரியத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி பதிவிட்டுருந்தார்கள்.