ரஜினிக்கு வில்லனாகும் பிரபல அதிரடி இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை.!

0
763
Darbar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இப்படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத்.

Image result for yuvraj singh father

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினி மும்பையில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

இதையும் பாருங்க : ரஷி கண்ணாவா இது.! கடைசில இவங்களும் இப்படி போட்டோ ஷூட்ல எறங்கிடாங்களே.! 

- Advertisement -

மேலும், இந்த படத்தில் யோகி பாபு நிவேதா பெத்துராஜ், ஸ்ரீமன் போன்ற பலர் நடித்து வருகின்றனர். தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Image result for yuvraj singh father

ரஜினியின் அறிமுக காட்சியில் யோக்ராஜ் சிங் நடிப்பதாகவும், ரஜினியுடன் பயங்கரமான சண்டைகாட்சி அவருக்கு இருக்கிறது என்று செய்திகள் வெளியாகின. யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். ஒரு சில போட்டிகளில் விளையாடிய இவர் பின்னர் நடிகராக அறிமுகமான யோக்ராஜ் பஞ்சாபி படங்களிலும் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-


Advertisement