அண்டை மாநிலமான கேரளாவில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலிக்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை நாளில் அளிக்கும் வரவேற்பை இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வீட்டில் கோலம் போட்டு விளக்கேற்றி விருந்து படைத்து வரவேற்பு கொடுத்து வந்தனர் மலையாள மக்கள். மலையாள மக்களை தவிர மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான்.
ஓணம் பண்டிகை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஓணம் புடவை தான். ஓணம் பண்டிகை வந்தாலே பல்வேறு பெண்களும் ஓணம் புடவையை கட்டிக்கொண்டு புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதிலும் நடிகைகளை பற்றி சொல்லவா வேண்டும். சமீபத்தில் சென்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல பிரபலங்களும் சமூக வலைதளத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
மேலும், ஓணம் புடவையை கட்டிக்கொண்டு அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வந்தனர். அந்த வகையில் தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனா தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டு தான் நெட்டிசன்களின் விமர்சனத்திற்க்கு ஆளாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா.
அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா. மேலும், இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். சமீபத்தில் இவரும் இவரது செல்ல மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இப்படி ஒரு நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சனா, தனது மகள் ஓணம் புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், உங்கள் மகளை நீங்கள் குழந்தையாக இருக்க விட மறுக்கிரீர்கள் என்று தொன்றுகிறது என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்த அர்ச்சனா, அவள் ஒன்றும் குழந்தை இல்லை என்று கூறியுள்ளார். அதே போல பல ரசிகர்களும், அர்ச்சனாவின் குழந்தையை குழந்தையை பாருங்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.