தொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய குடும்பம். இவருக்கு இவ்வளவு பெரிய மகளா.

0
9831
archana
- Advertisement -

90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.

-விளம்பரம்-
Image result for anchor archana"

ளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

- Advertisement -

‘ச ரி க ம நிகழ்ச்சியில் அர்ச்சனா தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த என்டர்டைனராகவும் இருந்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் பாடும் பாடகர்களுக்கு நிகராக அர்ச்சனாவின் காமெடியான ஆங்கரிங் ஸ்டைலுக்கும் பல்வேறு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவர்களுக்கும் அர்ச்சனாவின் ஆன்கரிங் மிகவும் பிடிக்கும். மேலும், ஒரு எபிசோடில் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பாடகர் கார்த்தி, எத்தனை சீசன் வந்தாலும் அர்ச்சனா இல்லமால் ச ரி க ம நிகழ்ச்சி இல்லை என்று பாராட்டி இருந்தார்.

 anchor archana"

-விளம்பரம்-

தொலைக்காட்சி மட்டுமல்லாது தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்திருந்தார் அர்ச்சனா. மேலும், வைகை எக்ஸ்பிரஸ், ஏண்டா தலையில எண்ண வெக்கல போன்ற படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு ஜீ குடும்பம் விருதுகள் விழாவில் அர்ச்சனாவிற்கு அந்த வருடத்தின் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதும், மக்களின் அபிமான தொகுப்பாளினி என்ற விருதும் வழங்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் அர்ச்சனா சிறந்த தொகுப்பாளினி என்ற விருதையும் பெற்றிருந்தார். இப்படி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு வெற்றிகரமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் அர்ச்சனா.

பல ஆண்டுகளுக்கு தொகுப்பாளினி அர்ச்சனா வந்து, இன்றும் புதிது புதிதாக வரும் ஆங்கர்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கினார் அர்ச்சனா. சமீபத்தில் இவரும் இவரது செல்ல மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’னு சொல்வாங்க இல்லையா?. அதேதான். அர்ச்சனா வீட்டு கன்னுக்குட்டி ஆங்கரிங் பண்ணஆரம்பிச்ச போது பலரும் வியந்தனர். இந்த நிலையில் அர்ச்சனா தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என்று வியந்துள்ளனர்.

Advertisement