ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'அண்ணா'. தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதைதான் இந்த சீரியல். கடந்த வாரம், சண்முகத்திடம் உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று எனக்கு தெரியும் என பரணி சபதம் எடுக்கிறார். பின், மறுநாள் காலையில் இசக்கி இடம் இருந்து 4 மிஸ்டு கால் வந்திருக்க, சண்முகம் பதறிப்பை அவருக்கு போன் செய்கிறார். பின் இசக்கி தனக்கு நடந்த கொடுமையை சொல்ல, சௌந்தரபாண்டியன் வீட்டுக்கு சண்முகம் ஆவேசமாக கிளம்புகிறார்.

அங்கு போய், இசக்கியிடம் தன்னுடன் வீட்டுக்கு வந்துவிடு என்று சண்முகம் அழைக்க, உன் தங்கச்சி வாழா வெட்டியாகி விடுவாள் என சௌந்தர பாண்டியன் நக்கல் அடிக்கிறார். பின் சண்முகம் கோவத்தோடு கிளம்பி அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும், வைகுண்டம், ஏன்டா இசக்கியை விட்டுட்டு வந்த என கோபப்பட்டு கேட்கிறார். உடனே பரணி, அவன் சரியாகத் தான் செய்திருக்கிறான், ஏன் அவனை ஏத்தி விடுறீங்க என்று சொல்ல, சண்முகம் அமைதியாக நிற்கிறார்.
அண்ணா சீரியல்:
பின் போன எபிசோடில், சண்முகம் சௌந்தர பாண்டிக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டுகிறார். அங்க இருக்கும் பெரியவர்களிடம், சௌந்தரபாண்டி ஏற்கனவே என் தங்கச்சியை நிறைய கொடுமை செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நேற்று மண்ணெண்ணையை ஊற்றி கொழுத்த போனார். அதற்கு அவருடைய அக்கா பாண்டியம்மாவும் துணை போயிருக்கிறார். அவங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் காப்பாற்ற முடியாமல் நின்று இருக்கிறார்கள். அதனால், இவ்வளவு கொடுமைகளோடு என் தங்கச்சி அந்த வீட்டில் இருக்கக் கூடாது, பெரியவர்கள் பேசி என் தங்கச்சியை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்கிறார்.

போன வாரம்:
அதற்கு, பாக்கியம் இசக்கியிடம் நீ உங்க வீட்டுக்கு போய் விடாதே. நீ போய்ட்டா நான் பாண்டிக்கு என்ன பதில் சொல்வேன் என்று அழுகிறார். பின் சண்முகம், உன் உசுரு தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம். எதுவும் வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு வா என்று இசக்கியிடம் சொல்கிறார். அதோடு, எங்க வாழ வேண்டும் என்று ஒரு ஆணுக்கு எப்படி உரிமை இருக்கோ, அதே மாதிரி பெண்ணுக்கும் இருக்கிறது. நீ வா அண்ணன் பார்த்துக்கொள்கிறேன் என்று இசக்கியிடம் சண்முகம் சொல்கிறார். இசக்கி ஒன்றும் புரியாமல் அப்படியே நிற்கிறார்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், சண்முகம் எவ்வளவு சொல்லியும் இசக்கி மனம் மாறாமல் அப்படியே நிற்கிறார். பின், தன் தோளில் இருக்கும் துண்டை கீழே போட்டு, எல்லாத்தையும் தூக்கிப்போட்டு இந்த துண்டை தாண்டி வா என்று இசக்கியை அழைக்கிறார். அப்போது சௌந்தரபாண்டி, இசக்கி இப்போ என் மருமகள் அவ வரமாட்டா என்று சண்முகத்தை வெறுப்பேற்றுவதைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக் :
பின் ஒரு வழியாக இசக்கி, எனக்கு என் அண்ணன் தான் முக்கியம் என்று சௌந்தர பாண்டிக்கு பதிலடி கொடுத்துவிட்டு துண்டைத் தாண்டி சண்முகத்துடன் போய்விடுகிறார். சண்முகமும் தனது தங்கையை மேளத்தாளத்துடன் தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அதைத்தொடர்ந்து இசக்கியை ஆரத்தி எடுத்து அவரது தங்கை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். பின், சண்முகம் இந்த வீட்டில் எந்த பயமும் இல்லாமல் நீ தைரியமாக இருக்கலாம் என்று இசக்கிக்கு ஆறுதலாக பேசுகிறார். அப்போது வீட்டுக்கு வந்த பரணி, நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு கோபமாக உள்ள செல்கிறார். இத்துடன் செயல் முடிகிறது






