சத்யா சீரியல ஏன் நிறுத்துறீங்க, அதுக்கு பதில் இந்த சீரியல நிறுத்துங்க. ஜீ தமிழின் அறிவிப்பால் புலம்பும் ரசிகர்கள்.

0
2792
sathya
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் சத்யா. இந்த தொடர் காதல் மற்றும் குடும்ப பின்னணியை மையமாக கொண்டது. ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிந்துரா பிந்து’ என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் தான் சத்யா சீரியல். இந்த தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக வைத்து கொண்டது தான் சத்யா சீரியல்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடர் ஒளிபரப்புச் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென்று இந்த தொடர் நிறுத்தப்படுவதாக சோசியல் மீடியாவில் தகவல் எழுந்து உள்ளது. அதில் அவர்கள் உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. எதிர்பார்த்த காரணங்களால் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ராஜகுமாரி சீரியல் முடிவடைகிறது. இந்த சீரியலின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24ஆம் தேதி ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும் என்றும் அறிவித்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் தற்போது சோசியல் மீடியாவில் புலம்பித் தள்ளி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சத்யா சீரியலை நிறுத்துவதற்கு பதில் செம்பருத்தி சீரியலை நிறுத்துங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் ஒஒ என்று செம பேமஸ் ஆக போனது. பின் செம்பருத்தி சீரியல் இருந்து ஆதி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் விலகியவுடன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்தது.

பின் சமீபகாலமாகவே செம்பருத்தி சீரியல் கதை நோக்கி செல்கிறது என்று தெரியாத அளவிற்கு போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சத்யா சீரியல் நிறைவடைகிறது என்று தெரிந்தவுடன் தயவுசெய்து சத்யா தொடருக்குப் பதிலாக செம்பருத்தி சீரியலை நிறுத்தி விடுங்கள் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இது குறித்து ஜீ தமிழ் தரப்பிலிருந்து என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

-விளம்பரம்-
Advertisement