சீரியலுக்காக அஜித் லெவலுக்கு செம ரிஸ்க் எடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.

0
8507
vai
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் அனைவருக்கும் இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்தார் நடிகை வைஷாலி தணிகை. இவர் கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் திடீரென விடைபெற்றார்.

- Advertisement -

மேலும், இவர் ஏற்கனவே ராஜா ராணி சீரியல் முதல் பக்கத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த சீரியலில் இருந்தும் திடீரென விலகினார்.தற்போது ‘கோகுலத்தில் சீதை’ தொடரில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று கோகுலத்தில் சீதை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஆஷா கவுடா, நந்த கோபால், வைஷாலி தனிகா, நந்தினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

 இந்நிலையில் இத்தொடரின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வைஷாலி தனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அதில் வைஷாலியை ஸ்டண்ட் கலைஞர்கள் கயிறு கட்டி மேலே தூக்க, அந்தரத்தில் தொங்குகிறார். துணிச்சலாக டூப் போடாமல் தானே நடித்த இந்தக் காட்சி குறித்து இன்ஸ்டாகிராமில் எழுதியிருக்கும் அவர், சின்னத்திரையோ அல்லது திரைப்படமோ அதில் அர்ப்பணிப்பு முக்கியம் என்று கூறியுள்ளார். மேலும் கோகுலத்தில் சீதை குழுவினர் இன்றி சாத்தியமில்லை எனவும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலர் சீரியலுக்காக அஜித் அளவுக்கு ரிஸ்க் எடுக்குறீங்களே என்று வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement