ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'கார்த்திகை தீபம்' ஒன்று. சமீபத்தில் தான் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம், ரேவதி தன் தாய் சாமுண்டீஸ்வரி செய்வதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கு, நீங்க எதுக்கு அவங்களுக்கு அடி பணிந்து போறீங்க, அம்மாவை கேள்வி கேட்டு அவங்கள திருத்துங்கப்பா என்று தனது தந்தை ராஜராஜனிடம் எடுத்து சொல்கிறார். அதற்கு ராஜராஜன், எவ்வளவோ முயற்சி பண்ணியாச்சு என்று தன் வருத்தத்தை பதிவு செய்கிறார்.

அதன் பின், ஸ்வேதா கார்த்தி இடம் ஒரு பாடலை பாடி காட்டுகிறார். கார்த்திக், மெதுவா பாடுங்க உங்க அம்மாக்கு கேட்க போகிறது என்று ஸ்வேதாவை எச்சரிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க சிவனாண்டி, கார்த்திக்கின் தாத்தா ராஜசேதுபதிக்கு எதிரான விரும்பனை கூட்டி வந்து சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் அனுப்பி வைக்க திட்டம் போடுகிறார். மேலும், அந்த வீட்டுக்குள் போகும்போது கொஞ்சம் பார்த்து தான் போகணும், ஏனென்றால் அந்த வீட்ல இருக்கவங்களுக்கு ஆம்பளையை பார்த்தாலே பிடிக்காது என்ற விருமனிடம் சிவனாண்டி சொல்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து திட்டம் போடுவதை கார்த்திக் மறைந்திருந்து பார்த்து விடுகிறார்.
கார்த்திகை தீபம் 2:
பின் நேற்று எபிசோடில், சாமுண்டீஸ்வரி கார்த்திகை தனக்கு கீழே மரியாதை குறைவாக நடத்த திட்டமிடுகிறார். கார்த்திக் இடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரை வீட்டுக்குள் அழைக்கிறார். அங்கே சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா என இருவர் மட்டும் அமைந்திருக்க, கார்த்திக்குக்கு உட்காரா கூட நாற்காலி இல்லை. அதனால் கார்த்திக் பிளான் செய்து, சந்திர கலா மீது காபியை கொட்டி, அவர் அலம்ப செல்லும் கேப்பில் அந்த நாற்காலியில் உட்கார, சாமுண்டீஸ்வரி ஷாக் ஆகுகிறார்.

நேற்றைய எபிசொட்:
மேலும், அபிராமி கார்த்திக்குக்கு போன் செய்து எல்லாம் நல்லபடியாக நடக்குதா என விசாரிக்க, கார்த்திக்கும் எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு என சொல்லி போனை வைக்கிறார். அதன் பிறகு சம்முண்டீஸ்வரி, குடும்பத்தினர் வெளியே கிளம்ப கார்த்தி தான் கார் ஓட்ட வேண்டும், கார் ஓட்டுவது மட்டுமின்றி சாமுண்டீஸ்வரி வெளியே இறங்கும்போது கதவை திறந்து விட வேண்டும் போன்ற பல கண்டிஷன்களை கார்த்திக்கிடம் போடுகிறார்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், கார்த்திக் டிரைவராக கார் ஓட்ட சாமுண்டீஸ்வரி திருவிழாவிற்கு செல்கிறார். அந்த சமயத்தில் கார்த்திக்கின் சகோதரர்களான அருண் மற்றும் ஆனந்த் வந்து, நீ உடனடியாக ஒரு ஜூம் மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டும் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி தூரத்தில் இருந்து பார்த்து, என்ன விஷயம் என்னாச்சு யார் அவர்கள் என கேட்க, லண்டனுக்கு எப்படி போவது என வழி கேட்டு வந்திருக்காங்க என்று பொய் சொல்லி கார்த்திக் சமாளிக்கிறார். பின் கார்த்திக் கோட் சூட் போட்டுக்கொண்டு மீட்டிங்கை அட்டென்ட் செய்ய, பூஜை முடிந்த பிறகு சாமுண்டீஸ்வரி கார்த்திகை தேடுகிறார்.

சீரியல் ட்ராக்:
மேலும், சாமுண்டீஸ்வரி காருக்குள் மீட்டிங் அட்டென்ட் செய்து கொண்டிருக்கும் கார்த்திக்கை நெருங்குவதற்குள் அவர் மறைந்து கொள்கிறார். பின் கார்த்திக் மீண்டும் கார் அருகே வர, கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி இடம், ஒரு புகைப்படத்தை கொடுத்து இதுதான் ராஜசேதுபதியின் பேரன், இதை கொண்டு வரத்தான் போயிருந்தேன் என்று பொய் சொல்ல, சம்முண்டீஸ்வரி அவரை மன்னித்து விடுகிறார். கடைசியில், ராஜசேதுபதியின் பேரன் இந்த ஊருக்குள் நுழையவே முடியாது. அவனைப் பார்த்தால் போட்டுத் தள்ளுங்க என்று சாமுண்டீஸ்வரி தனது அடியாட்களுக்கு உத்தரவு போடுகிறார். இத்துடன் சிறையில் முடிகிறது.






