ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'கார்த்திகை தீபம்' ஒன்று. சமீபத்தில் தான் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் கார்த்திக், சாமுண்டீஸ்வரி வீட்டில் நான் தான் உங்க எல்லாரையும் இன்டர்வியூ பண்ணி வேலைக்கு சேர்வேன் என்று ஒவ்வொருத்தராக கேள்விகளை கேட்கிறார். அப்போது, கார்த்திக் சந்திரகலாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்க, ஒரு வழியாக அவர் சமாளித்து விடுகிறார். கார்த்திக் நாளைக்கு வந்து வேலையில் சேர்ந்து கொள்வதாக சொல்கிறார்.

பின் சந்திரகலா, சிவனாண்டியிடம் கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் வேலைக்கு சேர்ந்தது குறித்து சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து, ஒரு பெண்ணை அவரது கணவர் கத்தியால் குத்தவர, மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் அவரை தடுக்கிறார்கள். ஆனால், அவர் இது என் குடும்பப் பிரச்சனை என மீசையை முறுக்க, சாமுண்டீஸ்வரி அவரை எட்டி உதைக்கிறார். பின், என் முன்னாடியே மீசையை முறுக்கறியா என ஆவேசப்பட, சாமுண்டீஸ்வரி ஆட்கள் அவனை கட்டிப்போட்டு அவன் மீசையை வழித்து விடுகிறார்கள்.
கார்த்திகை தீபம் 2:
மேலும், நேற்றைய எபிசோடில், ரேவதி தன் தாய் சாமுண்டீஸ்வரி செய்வதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கு, நீங்க எதுக்கு அவங்களுக்கு அடி பணிந்து போறீங்க, அம்மாவை கேள்வி கேட்டு அவங்கள திருத்துங்கப்பா என்று தனது தந்தை ராஜராஜனிடம் எடுத்து சொல்கிறார். அதற்கு ராஜராஜன், எவ்வளவோ முயற்சி பண்ணியாச்சு என்று தன் வருத்தத்தை பதிவு செய்கிறார். அதன் பின், ஸ்வேதா கார்த்தி இடம் ஒரு பாடலை பாடி காட்டுகிறார். கார்த்திக், மெதுவா பாடுங்க உங்க அம்மாக்கு கேட்க போகிறது என்று ஸ்வேதாவை எச்சரிக்கிறார்.

நேற்றைய எபிசொட்:
இது ஒரு பக்கம் இருக்க சிவனாண்டி, கார்த்திக்கின் தாத்தா ராஜசேதுபதிக்கு எதிரான விரும்பனை கூட்டி வந்து சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் அனுப்பி வைக்க திட்டம் போடுகிறார். மேலும், அந்த வீட்டுக்குள் போகும்போது கொஞ்சம் பார்த்து தான் போகணும், ஏனென்றால் அந்த வீட்ல இருக்கவங்களுக்கு ஆம்பளையை பார்த்தாலே பிடிக்காது என்ற விருமனிடம் சிவனாண்டி சொல்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து திட்டம் போடுவதை கார்த்திக் மறைந்திருந்து பார்த்து விடுகிறார்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி கார்த்திகை தனக்கு கீழே மரியாதை குறைவாக நடத்த திட்டமிடுகிறார். கார்த்திக் இடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரை வீட்டுக்குள் அழைக்கிறார். அங்கே சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா என இருவர் மட்டும் அமைந்திருக்க, கார்த்திக்குக்கு உட்காரா கூட நாற்காலி இல்லை. அதனால் கார்த்திக் பிளான் செய்து, சந்திர கலா மீது காபியை கொட்டி, அவர் அலம்ப செல்லும் கேப்பில் அந்த நாற்காலியில் உட்கார, சாமுண்டீஸ்வரி ஷாக் ஆகுகிறார்.

சீரியல் ட்ராக் :
இதைத்தொடர்ந்து அபிராமி கார்த்திக்குக்கு போன் செய்து எல்லாம் நல்லபடியாக நடக்குதா என விசாரிக்க, கார்த்திக்கும் எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு என சொல்லி போனை வைக்கிறார். அதன் பிறகு சம்முண்டீஸ்வரி குடும்பத்தினர் வெளியே கிளம்ப கார்த்தி தான் கார் ஓட்ட வேண்டும், கார் ஓட்டுவது மட்டுமின்றி சாமுண்டீஸ்வரி வெளியே இறங்கும்போது கதவை திறந்து விட வேண்டும் போன்ற பல கண்டிஷன்களை கார்த்திக்கிடம் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






