ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் 'நெஞ்சத்தை கிள்ளாதே' சீரியலும் ஒன்று. ஜெய் கணேஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் இருக்கிறார்கள். இந்த சீரியல் கௌதம் மற்றும் மதுமிதா ஆகிய இருவரை சுற்றி நகர்கிறது. கௌதம் ஒரு தொழிலதிபர், அவர் அவரைவிட ஏறக்குறைய பத்து வயது குறைவான படித்த நடுத்தர வர்க்கப் பெண் மதுமிதாவை திருமணம் செய்து கொள்கிறார்.

மேலும், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தற்செயலாக காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தீபாவளி கொண்டாட்டம் முடிந்து கௌதம், மதுமிதா வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டுக்கு வந்த கௌதம், மதுமிதாவை வரவேற்கும் அகிலாண்டேஸ்வரி பாட்டி தீபாவளி கொண்டாட்டம் எப்படி போச்சு என்று விசாரிக்க கௌதம் ரொம்ப ஜாலியாக இருந்ததாக சொல்கிறார்.
நெஞ்சத்தை கிள்ளாதே :
பின், மதுவின் அம்மா ரேணுகா கொடுத்து அனுப்பிய லட்டு மொத்தத்தையும் ரூமுக்கு எதுக்கு சென்ற கௌதம் அனைத்தையும் சாப்பிட்டு முடிக்க வயிறு கலக்க தொடங்குகிறது. இதனால் மது அவருக்கு கை வைத்தியம் பார்த்து தூங்க வைத்து அவரை ரசித்தபடி இருக்கிறார். அடுத்த நாள் அகிலாண்டேஸ்வரி பாட்டி கௌதம் இப்போதான் சந்தோஷமாக இருக்கான்.

இன்றைய எபிசொட்:
அதனால், இந்த வீட்டோட முழு பொறுப்பையும் நீ தான் பாக்கணும் என சொல்ல அபிஷேக் கேட்டு விடுகிறார். பின் போதையில் மதுவையும் கௌதமையும் சந்தோஷமாக இருக்க விட கூடாது என அபிஷேக் திட்டம் போடுகிறார் . இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது போன்ற பரபரப்புடன் சீரியல் முடிகிறது.






