ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ சீரியலும் ஒன்று. ஜெய் கணேஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த சீரியல் கௌதம் மற்றும் மதுமிதா ஆகிய இருவரை சுற்றி நகர்கிறது. இந்த வாரம் , மதுவின் அம்மா ரேணுகா கொடுத்து அனுப்பிய லட்டு மொத்தத்தையும் கௌதம் சாப்பிட்டு முடிக்க அவருக்கு வயிறு கலக்க தொடங்குகிறது.
இதனால் மது அவருக்கு கை வைத்தியம் பார்த்து தூங்க வைத்து அவரை ரசித்தபடி இருக்கிறார். அடுத்த நாள் அகிலாண்டேஸ்வரி பாட்டி. கௌதம் இப்போதான் சந்தோஷமாக இருக்கான். அதனால், இந்த வீட்டோட முழு பொறுப்பையும் நீ தான் பாக்கணும் என சொல்ல அபிஷேக் கேட்டு விடுகிறார். பின் போதையில் மதுவையும் கௌதமையும் சந்தோஷமாக இருக்க விட கூடாது என அபிஷேக் திட்டம் போடுகிறார்.
நெஞ்சத்தை கிள்ளாதே :
பின், நேற்று எபிசோடில், கௌதம், ராகுலை பிசினஸை பார்த்துக் கொள்ள கம்பெனிக்கு அழைக்கிறார். ஆனால், ராகுல் தன் நண்பனோடு சேர்ந்து பிசினஸ் செய்ய வேண்டும் என்று சொல்ல, மது ராகுலுக்கு ஆதரவாக பேசுகிறார். அதனால், அபிஷேக் கோபத்தில் கிரணுக்கு போன் செய்து தங்களது ஆபிசுக்கு இன்டர்வியூக்கு வர சொல்கிறார். இதையடுத்து, ஆபீசுக்கு போகும்போது, கௌதம் சந்தோஷிடம் மதுமிதாவிற்கு என்ன வேண்டும் என்று நான் யோசிக்கவே இல்லை. அவரிடம் சுத்தமாக பணம் இல்லை என்பது போல் கூறுகிறார்.
நேற்றைய எபிசொட்:
மேலும், வெளிநாட்டுக்கு டூர் சென்றிருந்த சகுந்தலா வீடு திரும்ப, அவரிடம் கௌதமின் பாட்டி நீ இல்லை என்றாலும் இந்த வீட்டில் நடக்க வேண்டியது எல்லாம் நல்லபடியாக தான் நடந்தது என்று நக்கல் அடிக்கிறார். அப்போது பேங்கில் இருந்து வரும் நபர், மதுமிதாவிடம் கையெழுத்து கேட்கிறார். மது எதற்கு என்று கேட்டதற்கு, கௌதம் சார் அவர் அக்கவுண்டில் உங்களை நாமினியாக சேர்க்க சொல்லி இருக்கிறார் என்று அந்த நபர் சொல்கிறார். அதைக் கேட்ட சகுந்தலா அதிர்ச்சியாகி எப்படியாவது அபிஷேக்கை மீண்டும் ஆபீசுக்கு அனுப்ப வேண்டும் இல்லை என்றால் எல்லாம் கை மீறி போய்விடும் என்று திட்டம் போடுகிறார்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், சகுந்தலா சொன்னதைக் கேட்டு அபிஷேக்கை மீண்டும் ஆபீஸ் வர கௌதம் அனுமதிக்கிறார். அதன் பிறகு கௌதம் மதுமிதாவின் அக்கவுண்டிற்கு ஒரு கோடி ரூபாய் அனுப்புகிறார். அவ்வளவு பணம் தனது அக்கவுண்டில் வந்ததை எதிர்பாராத மது, இது ஏதோ ஸ்கேம் என்ன நினைத்துக் கொள்கிறார். பின், கௌதம் அக்கவுண்டுக்கு பணம் வந்ததா என்று கேட்க , மதுமிதா ஆமாம் என்று சொல்ல, நான் தான் அனுப்பினேன் என்று கௌதம் கூறுகிறார்.
சீரியல் ட்ராக் :
இதையடுத்து, அக்கவுண்டில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதால் நைட் எல்லாம் தூக்கம் வராமல் தவிக்கும் மதுமிதா, விடிந்ததும் சகுந்தலாவிடம் உங்க பையன் ஒரு கோடி ரூபாய் பணம் அனுப்பி இருக்காரு, எனக்கு தூக்கமே வரல தயவுசெய்து திருப்பி எடுத்துக்க சொல்லுங்க என்று சொல்ல, சகுந்தலா மனதுக்குள் பிச்சைக்காரிக்கு ஒரு கோடியா என திட்டுகிறார். அதை தொடர்ந்து, கௌதம் வந்ததும் மதுமிதா பணத்தை திருப்பி எடுத்துக்கொள்ளச் சொல்ல, கௌதம் பணத்தை எடுத்துக் கொள்கிறார். பின், மதுமிதாவை பார்க்க கிரண் வீட்டுக்கு வர, மது ஷாக் ஆகி எதற்கு வந்தாய் என்று கேட்கிறார். கிரண் கம்பெனியில் வேலை கேட்க, அதெல்லாம் இல்லை இனிமே இங்க வரக்கூடாது என மது திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.