ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் 'நெஞ்சத்தை கிள்ளாதே' சீரியலும் ஒன்று. ஜெய் கணேஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் இருக்கிறார்கள். இந்த சீரியல் கௌதம் மற்றும் மதுமிதா ஆகிய இருவரை சுற்றி நகர்கிறது. கௌதம் ஒரு தொழிலதிபர், அவர் அவரைவிட ஏறக்குறைய பத்து வயது குறைவான படித்த நடுத்தர வர்க்கப் பெண் மதுமிதாவை திருமணம் செய்து கொள்கிறார்.

மேலும், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் தற்செயலாக காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில்நேற்று எபிசோட்டில் தீபாவளி கொண்டாட்டம் முடிந்து கௌதம், மதுமிதா வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டுக்கு வந்த கௌதம், மதுமிதாவை வரவேற்கும் அகிலாண்டேஸ்வரி பாட்டி தீபாவளி கொண்டாட்டம் எப்படி போச்சு என்று விசாரிக்க கௌதம் ரொம்ப ஜாலியாக இருந்ததாக சொல்கிறார்.
நெஞ்சத்தை கிள்ளாதே :
பின், மதுவின் அம்மா ரேணுகா கொடுத்து அனுப்பிய லட்டு மொத்தத்தையும் ரூமுக்கு எதுக்கு சென்ற கௌதம் அனைத்தையும் சாப்பிட்டு முடிக்க வயிறு கலக்க தொடங்குகிறது. இதனால் மது அவருக்கு கை வைத்தியம் பார்த்து தூங்க வைத்து அவரை ரசித்தபடி இருக்கிறார். அடுத்த நாள் அகிலாண்டேஸ்வரி பாட்டி கௌதம் இப்போதான் சந்தோஷமாக இருக்கான்.

நேற்றைய எபிசொட்:
அதனால், இந்த வீட்டோட முழு பொறுப்பையும் நீ தான் பாக்கணும் என சொல்ல அபிஷேக் கேட்டு விடுகிறார். பின் போதையில் மதுவையும் கௌதமையும் சந்தோஷமாக இருக்க விட கூடாது என அபிஷேக் திட்டம் போடுகிறார் . இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது போன்ற பரபரப்புடன் சீரியல் முடிகிறது.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், கௌதம், ராகுலை பிசினஸை பார்த்துக் கொள்ள கம்பெனிக்கு அழைக்கிறார். ஆனால், ராகுல் தன் நண்பனோடு சேர்ந்து பிசினஸ் செய்ய வேண்டும் என்று சொல்ல, மது ராகுலுக்கு ஆதரவாக பேசுகிறார். பின் அபிஷேக் கோபத்தில் கிரணுக்கு போன் செய்து தங்களது ஆபிசுக்கு இன்டர்வியூக்கு வர சொல்கிறார். இதையடுத்து, ஆபீசுக்கு போகும்போது, கௌதம் சந்தோஷிடம் மதுமிதாவிற்கு என்ன வேண்டும் என்று நான் யோசிக்கவே இல்லை. அவரிடம் சுத்தமாக பணம் இல்லை என்பது போல் கூறுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின், வெளிநாட்டுக்கு டூர் சென்றிருந்த சகுந்தலா வீடு திரும்ப, அவரிடம் கௌதமின் பாட்டி அகிலாண்டேஸ்வரி, நீ இல்லை என்றாலும் இந்த வீட்டில் நடக்க வேண்டியது எல்லாம் நல்லபடியாக தான் நடந்தது என்று நக்கல் அடிக்கிறார். அப்போது பேங்கில் இருந்து வரும் நபர், மதுமிதாவிடம் கையெழுத்து கேட்கிறார். மது எதற்கு என்று கேட்டதற்கு, கௌதம் சார் அவர் அக்கவுண்டில் உங்களை நாமினியாக சேர்க்க சொல்லி இருக்கிறார் என்று அந்த நபர் சொல்கிறார். அதைக் கேட்ட சகுந்தலா அதிர்ச்சியாகி எப்படியாவது அபிஷேக்கை மீண்டும் ஆபீசுக்கு அனுப்ப வேண்டும் இல்லை என்றால் எல்லாம் கை மீறி போய்விடும் என்று திட்டம் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






