ஒளிபரப்பை நிறுத்தப்போகும் முன்னணி தொலைக்காட்சி.! இல்லத்தரசிகள் ஷாக்.!

0
917
Tv-channel
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களது TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. 

-விளம்பரம்-
Image result for tamil channels

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும்  ஒரு சில நிகழ்ச்சிகள், ஜீ தமிழ் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது. 

- Advertisement -

சமீபகாலமாக ஜீ தமிழ் தான் மற்ற தொலைக்காட்சிகளை பின்னுக்குத் தள்ளி ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்துவருகிறது. இந்த நிலையில் தற்போது ரசிகர்களின் மனதைக் கவரும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. அது என்னவெனில் ஒரு சில மணி நேரம் மட்டும் ஒளிபரப்பை நிறுத்த திட்டமிட்டுள்ளதாம் ஜீ தமிழ் தொலைக்காட்சி.

வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் நாள் மட்டும் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளதாம் ஜீ தமிழ் தொலைக்காட்சி. ஜீ தமிழில் இந்த முயற்சிக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement