சினிமாவில் கலக்குவார் என்று எதிர்பார்த்த ரமணியம்மாள்.! தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் பாருங்க.!

0
16838
Ramani-Ammal

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘ச ரி க ம பா’ என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ராக்ஸ்டார் ரமணியம்மா பாட்டி. இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்திருந்தது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த போது சன், விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போல இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ரமணியம்மா பெரும் ஆச்சர்யமான போட்டோயல்;போட்டியாளராக களமிறக்கப்பட்றார். இவரது பாடலை கேட்டு நிகழ்ச்சி நடுவர்கள் கூட வியப்படைந்தனர்.

- Advertisement -

மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்ற பல்வேறு சினிமா இசையமைப்பாளர்களும் ரமணி பாட்டிக்கு சினிமாவில் பாட வாய்ப்பு தருவதாகவும் கூறியிருந்தனர். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா, விஷால் நடித்த சண்ட கோழி போன்ற படங்களில் இவருக்கு பாட வாய்ப்பு கொடுத்தனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே ரமணிஅம்மாள் பல படங்களில் பாடியுள்ளார்.இவர் தமிழில் வெளிவந்த பரத் நடித்த காதல், ஜீவா நடித்த தெனாவட்டு,கரண் நடித்த காத்தவராயன் படத்தில் வரும் பாடல்களில் ஒரு சில வரிகளை மட்டும் பாடியுள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் அவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு அடிகளார் அவர்களின் 79 வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாண மாணவிகள் நடத்தை இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் நான் ஆணையிட்டால், பம்பரக்கண்ணாலே என பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கபட்ட ரமணி பாட்டிக்கு தற்போது சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லையாம். இதனால் முன்பைப் போல மேடை கலைஞ்சராக மாறியுள்ளாராம்.

Advertisement