ஜாக்கிசானுடன் இளம் வயதில் செம்பருத்தி கார்த்திக் எடுத்த போட்டோ – எப்படி இருக்கார் பாருங்களேன்.

0
3357
karthi
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

நன்றாக சென்று கொண்டு இருந்த இந்த சீரியலில் இருந்து கார்த்தி விலகி பின்னர் பிரபல யூடு யூப் தொகுப்பாளர் அக்னி கார்த்தியாக நடித்து வருகிறார். கார்த்தி வெளியேறியது குறித்து அறிவித்த ஜீ தமிழ், இந்த தொடரை ஒரு மாபெரும் வெற்றி தொடராக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி அதேபோல் இந்த சீரியல் இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த கார்த்திக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

இதையும் பாருங்க : விஷ்ணு விஷுலின் முதல் மனைவி இந்த பிரபல நடிகரின் மகளா. அதுவும் அவர் ரஜினியோட உயிர் நண்பர். அதனால் தான் அவர் மகள் பெயர் ரஜினி.

- Advertisement -

ஆனால் இந்த தொடரில் இருந்து ஒரு சில எதிர்பாராத காரணங்களுக்காக கார்த்திக் மாற்றப்பட்டு இருக்கிறார். ஜீதமிழ் உடனான அவரது தொடர்பு மேலும் நீடிக்கும் அவரது பயணத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று கூறி இருந்தது. அதே போல இந்த சீரியலில் நடித்த ஜனனி கூறும் போது கார்த்திக்கு வெள்ளித்திரையில் நடிக்க தான் ஆசை அதனால் தான் அவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று கூறி இருந்தார்.

Sembaruthi Serial Actor Karthi Shares About His Weired Fan Moment

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி விலகிய பின்னர் முகிலின் என்ற வெப் சீரிஸ்ஸில் நடித்தார். இந்த சீரிஸ் 8 எபிசோட் மட்டும் ஒளிபரப்பாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கார்த்தி சிறு வயதில் ஜாக்கி சானுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. செம்பருத்தி சீரியலில் கார்த்தி இருந்த வரை இந்த சீரியல் வேற லெவல் TRP யில் சென்று கொண்டு இருந்தது. ஆனால், இந்த சீரியலில் இருந்து கார்த்தி எப்போது விலகினாரோ அப்போதே இந்த சீரியலின் வரவேற்பும் குறைந்தது. இதனால் இந்த சீரியலில் புது புது கதாபாத்திரத்தை இணைத்து வருகிறது சீரியல் குழு.

-விளம்பரம்-

Advertisement