இயக்குனரையே மாற்றிய ஜி தமிழ்.! சீரியல் வரலாற்றிலேயே முதல் முறை.! காரணம் இது தானாம்.!

0
2515
- Advertisement -

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் பார்வதியாக ஷாபனாவும், ஆதியாக ஆபீஸ் கார்த்தியும் நடித்து வருகின்றனர். இந்த தொடரின் மூலம் ஷாபனாவிற்கு கடந்த ஆண்டின் பிரபலமான சீரியல் முகம் என்ற விருதும் கிடைத்து. 

-விளம்பரம்-
Image result for sembaruthi serial

பெரும்பாலும் சீரியல்களில் நடிகர்கள் தான் ஒருவருக்கு பதில் மற்றொருவர் மாறி வருவார்கள், ஆனால், ஜீ தொலைக்காட்சிகளில் நல்ல டி.ஆர்.பி.யுடன் முன்னணியில் இருக்கும் `செம்பருத்தி’ சீரியலை இயக்கி வந்த சுலைமான் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் நீராவிப் பாண்டியன் இயக்கத் தொடங்கியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இந்த சீரியலின் முதல் இயக்குனர் சுலைமான் பேசுகையில்,
ஜீ தமிழ் சேனல் டி.ஆர்.பி. யில் ஒரு புதிய சாதனையைத் தொடக் காரணமான சீரியல் செம்பருத்தி. நான் தொடரை இயக்கிட்டிருந்த காலத்துல இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டதுங்கிறதை நினைக்கிறப்ப பெருமையா இருக்கு. நான் வெளியேறிட்டாலும், சீரியல் ஒளிபரப்பாகிட்டேதான் இருக்கும்.

`யார் இயக்கினாலும், சீரியல் இன்னும் ஹிட் ஆகட்டும்’னு வாழ்த்தறேன். மத்தபடி வெளியேறியதன் காரணங்களை டீடெய்லா பேச விரும்பலை’ என்கிறார் இவர். நீராவிப் பாண்டியனிடம் பேசிய போது, `இப்பதான் சீரியலுக்குள் வந்திருக்கேன். இவ்ளோ நாள் சீரியல் எப்படிப் போச்சுங்கிறது தெரியும். முந்தைய விறுவிறுப்பு குறையாம, அதேநேரம் என் ஸ்டைல்ல என்ன புதுமை பண்ண முடியுமோ அதையும் பண்ண முயற்சி பண்ணுவேன்

-விளம்பரம்-
Advertisement