ஜீ தமிழின் ஹிட் சீரியல் செம்பருத்தி முடிவுக்கு வருகிறதா? – வெளிவந்த தகவல் (காரணம் இதுவா ?)

0
629
sembaruthi
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஆகையால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக சேனலும் வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சமீப காலமாக மக்கள் அனைவரும் சின்னத்திரையை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் செம்பருத்தி.

-விளம்பரம்-

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஐந்து வருடமாக மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சீரியல் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர்.

- Advertisement -

செம்பருத்தி சீரியல் பற்றி தகவல்:

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் தெலுங்கு மொழியில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷபானா நடித்து வருகிறார். கார்த்திக் ராஜ் -ஷபானா இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவல் என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலக காரணம்:

பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். பிறகு இவர் சினிமாவில் நடிக்க போகிறார் என்று அறிவித்தார். பின் இவருக்கு பதில் தொகுப்பாளர் அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

செம்பருத்தி சீரியல் ஷாபனா திருமணம்:

ஆரம்பத்தில் இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. இடையில் கொஞ்சம் டல்லாக சென்றது. பின் கடந்த ஆண்டு நடிகை ஷாபனாவிற்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யானுக்கும் திடீர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஷபானா தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். பின் பெரிய நடிகர் மாற்றம் எதுவும் சீரியலில் நடை பெறுகிறது. மேலும், இந்த சீரியல் 1258 எபிசோடுகளை கடந்து உள்ளது.

sembaruthi

செம்பருத்தி சீரியல் முடிவு:

சமீப காலமாக சீரியல் கொஞ்சம் டல்லாக செல்வதால் ரசிகர்கள் தொடரை முடித்துவிடலாம் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். கொரோனா நேரத்தில் கூட தொடர் இடைவிடாமல் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் செம்பருத்தி சீரியல் குறித்த தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இது செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் சீரியலை முடித்து விடுங்கள் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

Advertisement