ஜீ தமிழின் பிரபல சீரியலை கழுவி ஊற்றிய சின்மயி. காரணம் என்ன தெரியுமா ?

0
107514
Chinmayi
- Advertisement -

சினிமா திரை உலகில் பிரபலமான பின்னணி பாடகி சின்மயி பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள். ஏன்னா,அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமாகி உள்ளார். மேலும்,சமீப காலமாகவே பாடகி சின்மயி குறித்து பல சர்ச்சைகளும்,விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. அதோடு பாடகி சின்மயி அவர்கள் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமா திரை உலகிற்கு அறிமுகமானர். பின்பு இவர் எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டைக் கோழி போன்ற பல திரைப்படங்களில் பாடி உள்ளார். அது மட்டும் இல்லாமல் சின்மயி அவர்கள் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். மேலும், பல நிகழ்ச்சிகளை கூட தொகுத்து வழங்கி உள்ளார்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த பாடல் ஆன ‘மையா மையா’ என்ற பாடலையும் சின்மயி அவர்கள் தான் பாடி உள்ளார். இப்படி தன்னுடைய வசீகரக் குரலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர். இதனைத்தொடர்ந்து சின்மயி பாடகி மட்டும் இல்லாமல் திரைப்படத்தில் பின்னணி குரல் தருபவராகவும் இருக்கிறார். இதனைத்தொடர்ந்து பாடகி சின்மயி அவர்கள் 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், பாடகி சின்மயி அவரது ட்விட்டர் பக்கத்தில் சமீபகாலமாகவே அவர்கள் பகிர்ந்து வரும் அனைத்து விஷயங்களும் அதிர்ச்சி தரும் விஷயங்களாகவே உள்ளது. குறிப்பாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக அவர் பகிர்ந்த விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது கூட சொல்லலாம்.

இதையும் பாருங்க : பட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே.

- Advertisement -

மேலும், பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களால் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை பற்றி சின்மயி பேசிய பேச்சு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு ஆதரவாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவர்களுக்கு உதவும் வகையிலும் செய்து வருகிறார். சின்மயி அவர்கள் சில வருடங்களாகவே பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்காக போராடுபவர். இவர் “me too” என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் அதிகமாக கொண்டு போய் சேர்த்தார் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் கூட கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழாவிற்கு வைரமுத்து அவர்கள் வந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் சின்மயி அவர்கள் கோபமாக ட்விட் போட்டு இருந்தார்.

Image result for rettai roja serial"

அதில் பாதிக்கப்பட்ட என்னை தடை செய்கிறார்கள். ஆனால்,குற்றவாளியை விருந்தினராக அழைத்து மரியாதை செய்கிறார்கள் என கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படி சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு கருத்தை கூறி கொண்டே இருக்கும் சின்மயி அவர்கள் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலை குறித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இதனைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “ரெட்டை ரோஜா” சீரியலில் இருந்து ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார்.

-விளம்பரம்-

அதில் அரை குறையாக உடை அணிந்து இருக்கும் பெண்களை பார்த்த நாயகன் ‘நீங்களெல்லாம் பெண்கள் தானா? என்று கேட்டுள்ளார். மேலும், தலை வாருவது இல்லை, வளையல் போடுவதில்லை, பொட்டு வைப்பதில்லை, டிரெஸா போடுறிங்க, பார்த்தாலே அறையணும் போல இருக்கு என்று விளாசி தள்ளி இருந்தார். இப்படி ரெட்டை ரோஜா சீரியலில் நடிகர் ஒருவர் பெண்கள் அணிந்திருக்கும் ஆடையை பார்த்தவே அடிக்க தோன்றுவதாக பேசியிருக்கிறார். மேலும், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் பேசி இருப்பதாக கூறியுள்ள சின்மயி, வெளங்கிடும் கலாச்சாரம் என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் சின்மயின் இந்த கருத்தை பார்த்த நெட்டிசன்கள் இயக்குனர் சொல்வதை செய்கிறார்கள். பணம் பத்தும் செய்கிறது என பதிவிட்டுள்ளார்.

Advertisement