பாரதி கண்ணம்மா 2 முதல் மகாநதி வரை – விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களை TRPயில் பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ் சீரியல்கள்.

0
783
mahanadhi
- Advertisement -

டிஆர்பி ரேட்டிங்கில் பாரதிகண்ணம்மா 2 சீரியலை அதல பாதாளத்துக்கு ஜீ தமிழ் சீரியல்கள் தள்ளியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள்.

-விளம்பரம்-

அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி வருகிறது. சீரியல் மட்டும் இல்லாமல் காமெடி ஷோ, பலவித ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள், வெரைட்டி வெரைட்டியான நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

- Advertisement -

சீரியல் டிஆர்பி:

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றது. ஆகவே மக்கள் வெள்ளித்திரைக்கு அதிகம் செல்வதை விட சின்னத்திரையை தான் அதிகம் கவனிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் புதுபுது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

பாரதி கண்ணம்மா டிஆர்பி:

மேலும், சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் என தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் சேனல்களாக திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பிற சேனல் சீரியல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்க் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

நான்காவது இடம்:

அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் பார்க் நிறுவனம் டி ஆர் பி ரேட்டை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் எல்லாம் பிரபல சேனல் சீரியல்களை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆகா கல்யாணம் சீரியலை பின்னுக்கு தள்ளி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அனலட்சுமி சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது

ஐந்தாவது இடம் சீரியல்:

பின் 9.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலை பின்னுக்கு தள்ளியிருக்கிறது. அதேபோல் 10 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சீரியலை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. அதோடு எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் முன்னிலையில் இருக்கும். தற்போது பின்னுக்கு சென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் பத்து முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலை பிண்ணுக்கு தள்ளி இருக்கிறது.

Advertisement