3 சர்வைவர் போட்டியாளர்கள் முதல் சத்யா சீரியல் ஆயிஷா வரை – ‘சூப்பர் குயின்’-ல் கலந்துகொள்ள உள்ள 12 சின்னத்திரை பிரபலங்கள்

0
296
- Advertisement -

கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அனைவரும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் தற்போது புதிதாக ஒரு நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. சமீபத்தில் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-
Super Queen (Zee Tamil) TV Show Contestants, Judges & Hosts

இதனை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் ‘சூப்பர் குயின்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. அதோடு விஜய் டிவிக்கு நிகராக ஜீ தமிழில் தற்போது புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், இந்த சூப்பர் குயின் நிகழ்ச்சியில் நடுவராக ராதா, நடிகர் நகுல், பிக்பாஸ் பிரபலம் முகேன் உள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 சின்னத்திரை நடிகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஐரா அகர்வால்:

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் குத்துச் சண்டையில் அதிக ஆர்வம் கொண்டவர். 2019ஆம் ஆண்டு நடந்த சர்வதேச குத்துச்சண்டை சாம்பியனில் இந்தியா சார்பில் ஐரா கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா மகள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

வைஷ்ணவி அருள்மொழி:

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவர் பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும், இவர் அழகு, மலர், பொண்ணுக்கு தங்க மனசு, பேரன்பு போன்ற தொடர்களிலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
ப்பா.. எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.." - ரசிகர்களை  சூடேறும் சீரியல் நடிகை வைஷ்ணவி..! - Tamizhakam

ஆஷா கவுடா :

இவர் சீரியல் நடிகை மட்டுமில்லாமல் ஒரு சிறந்த மாடலும் ஆவார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் வாசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் நடன இயக்குனர் நந்தகோபால் கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆஷா தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஜனனி அசோக்குமார்:

சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ஜனனி. இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் சரண்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் ஏற்கனவே செம்பருத்தி, மௌனராகம் போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார். இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

சூப்பர் குயின்' ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 12 சின்னத்திரை  பிரபலங்கள்!

தேஜஸ்வினி கவுடா:

இவர் கன்னட சீரியலின் மூலம் தான் சின்னத் திரைக்கு அறிமுகமானார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா No 1. என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா கிருஷ்ணன் :

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி முடிவடைந்த மிகப்பிரபலமான சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் மூலம் ஐஸ்வர்யா கிருஷ்ணன் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஒரு விளையாட்டு வீரர். இவர் இது போன்று பல நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விளையாட்டு வீரர் மட்டுமில்லாமல் மாடலும் ஆவார்.

வாவ்.. செம்ம அழகாக இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

ஸ்வாதி ஷர்மா :

இவர் ஒரு மாடல் ஆவார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நினைத்தாலேஇனிக்கும் என்கிற தொடரில் நடிகையாக நடித்து வருகிறார். இதற்கு முன்பு இவர் துரோணா, ஒண்டு கண்டேய கதை, ஃபார்ச்சூனர் போன்ற பல கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

லாவண்யா:

இவர் மிகப் பிரபலமான நடிகை. சென்னையை சேர்ந்த மாடல் அழகியும் ஆவார். இவர் மெட்ராஸ் குயின், மிஸ் இந்தியா, மிஸ் போட்டோஜனிக் போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ளார். மிஸ் தமிழ்நாடு 2020ல் இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 லாவண்யா : இவர் சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி ஆவார். இவரும் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். மெட்ராஸ் குயின், மிஸ் சவுத் இந்தியா மற்றும் மிஸ் ஃபோட்டோஜெனிக் ஆகிய பிரபலமான பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 'மிஸ் தமிழ்நாடு 2020'-இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜே பார்வதி:

விஜே மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பார்வதி. தற்போது மிகப் பிரபலமான தொகுப்பாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பல கார்ப்பரேட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சர்வைவர் நிகழ்ச்சியிலும்பங்கு பெற்று இருந்தார்.

ஆயிஷா:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைத்து இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்த சத்யா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருடைய எதார்த்தமான பேச்சும் நடிப்புக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் இதற்கு முன்பு விஜய் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

ஜீ தமிழ் சீரியல் நடிகை ரவுடி பேபியின் வைரல் போட்டோஸ்..

கண்மணி மனோகரன்:

இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் ஆவார். சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு மீடியாவிற்குள் நுழைந்தார். தற்போது விஜய் டிவியில் டிஆர்பியில் உச்சத்திலிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சூப்பர் குயின்' ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 12 சின்னத்திரை  பிரபலங்கள்!

ஸ்ரீது :

இவர் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். பின் ஆயுத எழுத்து, கல்யாணம் கல்யாணம், மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்து உள்ளார். அது மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

Advertisement