நீங்க நினைக்கற மாதிரி இந்த ஷோ இல்ல – சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருஷ்டியின் உருக்கமான பதிவு.

0
3439
- Advertisement -

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறி இருக்கும் ஸ்ருஷ்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் சர்வைவர் ஷோ ஒரு ரியாலிட்டி ஷோ போல இருக்கலாம். ஆனால் நான் சொல்றேன் நீங்க டீவில பார்ப்பதெல்லாம் ஒண்ணுமே இல்ல. ஒரு பழமையான வாழ்க்கை முறையை வாழ்வது எளிதான காரியமல்ல..இன்னமும் நிகழ்ச்சியில் இருக்கும் என்னுடைய சக போட்டியாளர்கள் என் வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சி இரக்கமற்றது, அது உங்களை கடுமையாக தாக்கும். சொகுசான வாழ்க்கை முறையில் இருந்து பழகிய உங்கள் உடல், மனம், புத்தி என்று அனைத்தையும் கடுமையாக பாதிக்கும்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-152-1024x568.jpg

இதற்கெல்லாம் மேலாக உங்கள் குடும்பத்தினரை விட்டுவிட்டு யார் என்று தெரியாத நபர்களுடன் தன்னந்தனியாக ஒரு தீவில் நீங்கள் வேலை செய்ய வேண்டும். அதுவும் ஒவ்வொரு நாளும் யாரை நம்புவது என்ற ஒரு அழுத்தத்துடன் நீங்கள் இருப்பீர்கள். நான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் இருக்கலாம்.ஆனால், நான் வெளியேறியதற்கு காரணம் இருக்கிறது என்று நம்புகிறேன்.

இதையும் பாருங்க : ந்த பக்கம் சீவலு (Survivor) இந்த பக்கம் செதரலு(Ipl) – ஒளிபரப்பு நேரத்தை மாற்றிய பிக் பாஸ் குழு.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் ஒன்றைக் கற்றுக் கொண்டேன் நம்முடைய வாழ்க்கையில் கிடைக்கும் சிறிய விஷயங்களை கூட நாம் மகிழ்ச்சியாக தான் பார்க்க வேண்டும். இது என்னுடைய வாழ்க்கையின் பார்வையையே மாற்றி இருக்கிறது.தோல்விகள் அனைத்தும் ஒரு அனுபவம் தான் இந்தத் தோல்வியை நான் தடைக்கற்களாக பார்க்காமல் என்னுடைய படிக்கற்களாக பார்க்கிறேன். இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் நாள் தொடர முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

அதே போல தினமும் ரசிகர்களை தொடர்பு கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தையும் நான் இழந்து விட்டேன் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வலி, கஷ்டங்கள் அனைத்தையும் எண்ணி நான் வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் அடைவேன். உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி குறிப்பாக என்னுடைய மீம்களுக்கு உங்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பை அளித்த ஜீ தமிழ், அர்ஜுன் சாருக்கு நன்றி. விரைவில் ஒரு நல்ல பிராஜெக்டுடன் உங்களை சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement