விரைவில் திருமணம், சீரியலில் இருந்து விலகிய கனா சீரியலின் முக்கிய நடிகை

0
633
- Advertisement -

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் இருந்து முக்கிய நடிகை வெளியேறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புது புது கதைகளைத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. குறிப்பாக, கார்த்திகை தீபம், கனா, நளதமயந்தி, சீதாராமன், அண்ணன் போன்ற பல தொடர்கள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து பிரபல நடிகை வெளியேறிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

கனா சீரியல்:

அதாவது ஜீ தமிழில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் கனா. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கதாநாயகி எப்படியாவது ஓட்டப்பந்தத்தில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் அப்பா நினைக்கிறார். இதனால் அப்பா மகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

சீரியல் கதை:

ஹீரோயின் கனவிற்கு ஹீரோ துணையாக நிற்கிறார். அப்பா- மகள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? கதாநாயகி தன்னுடைய லட்சியத்தில் வெற்றி பெற்றாரா? என்பதே சீரியல் கதை. இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் கதாநாயகியாக தர்ஷனா அன்பரசி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பே பிற சேனல் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சீரியலில் இருந்து விலகிய காரணம்:

இந்த சீரியலில் கதாநாயகனாக உன்னிகிருஷ்ணன் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது தர்ஷனா அன்பரசிக்கு திருமணம் நடைபெற இருப்பதால் கனா சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார். இவருக்கு பதில் இந்த சீரியலில் நடிகை டோனிஷா என்பவர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி சேனல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்.

புது நடிகை அறிமுகம்:

குறிப்பாக, இவர் தெலுங்கில் ஹிட்லர் காரி பெல்லம், மலையாளத்தில் பலுங்கு என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் இவருடைய காட்சிகள் ஜீதமிழ் டிவியில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால், தர்ஷனா சீரியல் இருந்து வெளியேறித்து குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்

Advertisement