ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ‘வள்ளியின் வேலன்’ ஒன்று. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சித்து மற்றும் ஸ்ரேயா நடித்து வருகிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாகவும் துணையாக நிற்கும் வேலனின் கதைதான். இந்த வாரம், வள்ளி காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சிக்காக புடவையில் தேவதை போல் மேல் இருந்து கீழே இறங்கி வருகிறார். அதைப் பார்த்து, வேலன் வாய் அடைத்து நின்று கொண்டிருக்கிறார்.
வள்ளியை தொடர்ந்து வந்த ரத்தினவேலிடம், வேலன், போலாமா என்று கேட்கிறார். அதற்கு, ரத்தினவேலு காலேஜ் ஒருபுறம் இருக்கு, கட்சி ஆபீஸ் ஒரு பக்கம் இருக்கு எப்படி ஒன்றாக போக முடியும் என்று கேட்கிறார். வேலன், நீங்க காலேஜுக்கு விருந்தினராக வருவீர்கள் என்று அம்மா தான் சொன்னாங்க என்று வேதநாயகியை கை காட்டுகிறார். ஆனால் ரத்தினவேலு, இன்று முதலமைச்சருடன் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொல்லி தன் அக்காவை கல்லூரி விழாவுக்கு போக சொல்கிறார்.
வள்ளியின் வேலன் :
அதைத் தொடர்ந்து கல்லூரிக்கு வந்த வள்ளியும் வேலனும், கல்லூரி முதல்வரிடம் ரத்தினவேலு வேறு வேலையாக இருக்கிறார் என்று சொன்னவுடன், கல்லூரி முதல்வர் வள்ளி இடம் வருத்தத்தோடு பேசுகிறார். பின் நேற்று எபிசோடில், காலேஜுக்கு சிறப்பு விருந்தினராக வந்த வேதநாயகி, ரத்தினவேல் அமைச்சராக இருப்பதற்கு தான்தான் காரணம் என்பது போல் தன்னை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்து, பேச்சுப் போட்டியில் வள்ளி கலந்து கொள்ளும் போது, ரத்தினவேல் உள்ளே நுழைகிறார்.
நேற்றைய எபிசொட் :
அவரைப் பார்த்து வள்ளி சந்தோஷப்பட, வேதநாயகி ஷாக் ஆகிறார். பின், வள்ளி பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பேச ரத்தினவேல் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார். அப்போது வள்ளியும் தன் அப்பாவை பற்றி பெருமையாக பேசுகிறார். இதையடுத்து நடன போட்டி நடக்கிறது. அப்போது வள்ளியுடன் ஜோடியாக டான்ஸ் ஆட இருந்தவரை சரத் டீம் கடத்திவிட, வள்ளி செய்வதறியாது தவிக்கிறார்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், வள்ளியுடன் டான்ஸ் ஆட இருந்த சிவாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று வள்ளியிடம் வேலன் சொல்கிறார். பின் வள்ளியை கடைசி போட்டியாளராக டான்ஸ் ஆட அழைக்க, வேலன் வள்ளியுடன் சேர்ந்து ஆட, இவர்களின் ஆட்டத்தை பார்த்து அனைவரும் கைதட்டுகிறார்கள். இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரத்தினவேல் பரிசுகளை வழங்குகிறார். ஆனால், வள்ளிக்கு எந்த போட்டியிலும் பரிசு கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார். அப்போது வேலனும் வள்ளிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக் :
அந்த சமயம் பார்த்து, கல்லூரி முதல்வர் ஒரு சிறப்பு பரிசு இருக்கிறது, அதை பெறுபவர் வள்ளி ரத்தினவேல் பாண்டியன் என்ற அறிவிக்க, வள்ளி சந்தோஷப்படுகிறார். பின் தன் தந்தையிடம் பரிசை பெற்றுக் கொண்ட வள்ளி, சந்தோஷத்தில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து, ரத்தினவேலுக்கும் கல்லூரி சார்பாக ஒரு நினைவு பரிசு கொடுக்க, அதில் இருக்கும் பொருட்களை பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார். கடைசியில், வள்ளித் தன் தந்தையிடம் பரிசு பெறும் புகைப்படத்தை வேலன் வள்ளிக்கு கொடுக்க, அவர் சந்தோஷத்தில் வேலனுக்கு நன்றி கூறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.