அடித்து பழுக்க விடாதேம்மா. தனது மகளை விமர்சித்த நபருக்கு அர்ச்சனா கொடுத்த பதிலடி.

0
2326
archana
- Advertisement -

பெண் தொகுப்பாளினிகள் அரிதாக இருந்த காலம் முதல் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. 90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.ளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா.

- Advertisement -

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா. மேலும், இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். சமீபத்தில் இவரும் இவரது செல்ல மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில் அர்ச்சனா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர்,அடித்து பழுக்க விடாதேம்மா, இந்த இளம் தோலுக்கு இவ்வளவு மேக்கப் தகுமா என்று கமன்ட் செய்தார். அதற்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா, மேக்கப்பா ? அவள் வெறும் கம்பளை மட்டும் தான் போட்டிருக்கா. என்ன பிரச்சனை உங்களுக்கு. விருப்பை காண்பிக்கிறீர்களா ? அடுத்த முறை ட்ரை பண்ணுங்க என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement