முதன் முறையாக டிவி நிகழ்ச்சிக்கு தனது மகனுடன் வந்த தொகுப்பாளர் தீபக்.! இவ்வளவு பெரிய மகன் இருக்காரா.!

0
2579
Deepak
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர், சீரியல் நடிகர் என விளங்கி வருபவர் தீபக், இவர் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் நடித்ததால் சிறந்த ஜோடி என தமிழக அரசு விருது அறிவித்திருந்தது. 2009 முதல் 2014 வரையில் விருது அறிவித்தார்களே தவிர கையில் எதுவும் கிடைக்கவில்லை. ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தீபக்.

- Advertisement -

அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ‘இவனுக்கு தண்ணீல கண்டம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரை இயக்கிய சக்திவேல் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்க்கு வரவேற்பை பெற்றது.

தீபக் கடந்த 2008 ஆம் ஆண்டு ரஞ்சினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தீபக் தனது மகனை ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்து வந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement