Zomato டெலிவரி நபர் தாக்கியதா பெண் ஆடியுள்ள நாடகம் – யார நம்பறதுனு தெரியல்னு புலம்பிய பவித்ரா.

0
2142
zomato
- Advertisement -

சமூக வலைதளத்தில் பரவும் செய்தி எப்போதும் உண்மை இல்லை. அதற்கு எப்போதும் இரண்டு முகங்கள் இருக்கும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட பெண் ஒருவர் வீடியோ ஒன்றில் பேசி இருந்தார். அதில் பேசிய அந்த அந்த பெண், கடந்த மார்ச் 9ஆம் தேதி தன்னுடைய அப்பார்ட்மெண்டில் இருந்தபோது 15:20 அளவில் உணவை ஜுமாடோ ஆர்டர் செய்திருந்தேன். ஆனால், ஒரு மணி நேரம் கழித்தும் ஆர்டர் வந்து சேராததால் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தன்னுடைய ஆர்டரை கேன்சல் செய்யுமாறும் அல்லது தனக்கு அதற்கான பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-
https://twitter.com/NoooWhiteKnight/status/1369615080560599041

இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது டெலிவரி நபர் வந்து சேர்ந்தார். அவரை நான் காத்திருக்க சொன்ன போது அவர் என்னிடம் தகாத வார்த்தைகளால் பேசி ‘நான் என்ன உன் அடிமையா என்ன ? என்று கூச்சல் போட்டார். இதனால் நான் என்னுடைய கதவை சாத்த முற்பட்டபோது அவர் கதவை தள்ளி உள்ளே நுழைந்து என்னுடைய மூக்கில் தாக்கி விட்டு சென்றுவிட்டார். இவ்வாறாக அந்தப்பெண் கூறியிருந்தார். சமூகவலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவ சம்பந்தப்பட்ட அந்த டெலிவரி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து அந்த நபரும் கைது செய்யப்பட்டார். இப்படி ஒரு நிலையில் போலீசிடம் அந்த டெலிவரி நபர் வேறு சில ஷாக்கான சம்பவத்தை கூறியிருக்கிறார். சம்பந்தப்பட்ட அந்த பெண் தான் தன்னிடம் அசிங்கமாக பேசியதாகவும் மேலும் தன்னை அவர் செருப்பால் அடித்ததாகவும் கூறியுள்ளார். அப்படி அவர் தன்னை அடிக்கும்போது தற்காப்பிற்காக தான் தடுத்ததாகவும் அப்போது அவருடைய கையாலேயே அவருடைய முகத்தில் முடித்துக்கொண்டார் என்றும் அந்த நபர் கூறியிருக்கிறார்

இந்த பதிவு வைரலானதை அடுத்து பலரும் அந்த பெண்ணை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், பெண் என்பதால் சுலபாக ஒரு ஆண் மீது பழி போட்டு விடலாமா ? என்று பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள பவித்ரா, யாரை நம்புவது, நம்பக் கூடாது என்பதே மிகவும் கடினமாக இருக்கிறது. உண்மையான குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்றொருவரை தாக்க உரிமை கிடையாது என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பெண் ஒருவரை கற்பழித்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நபர் ஒருவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement