1கி தக்காளி இவ்ளோ தானா ? குறைந்த விலையில் தக்காளி விற்கும் நீலகிரி விவசாய சகோதரர்கள்.

0
1328
- Advertisement -

சமீபகாலமாகவே தக்காளி விலையானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில்  குந்தா பகுதியை சேர்ந்த விவசாய சகோதரர்கள் தக்காளியை 1 கிலோ 80 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தக்காளியின் விலை 200 ரூபாயை தொட்டு விட்டது. ஆகையால் தமிழக அரசு தக்காளியை ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்து முதற்கட்டமாக 500 கடைகளில் விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் இந்த சகோதர்கள் செய்யும் சேவை அந்த ஊர் மக்களிடையே நெகிழியை எற்படுத்தியது.

-விளம்பரம்-

விவசாய சகோதரர்கள்:

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்தவர்கள் விவசாயி ராமன், புட்டசாமி. இவர்கள் நீலகிரி மாவட்டம் குந்தா பகுதிகளில் தாங்கள் அறுவைடை செய்த தக்களியை 80 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இது குந்தா மக்களுக்கு தாங்கள் செய்யும் சேவை என்றும் அவர்கள் கூறியிருந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தக்காளி 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதால் நீலகிரி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றனர்.      

- Advertisement -

விவசாய சகோதர்கள் கூறியது,

எங்களுக்கு விவசாயம் ஒரு தொழில், நாங்களும் இந்த பகுதியில் அனைவரும் சாகுபடி செய்வது போல தான் நாங்களும் மழைக் காய்கறிகளை விவசாயம் செய்து கொண்டிருந்தோம். வீட்டு பயன்பட்டிற்க்கான தான் தக்காளியை விவசாயம் செய்தோம், ஆனால் அது நல்ல விளைச்சல் தந்ததால் அதையே பயிரிட்டோம் என்று கூறினார். ஏப்ரல் மாதம் மைசூரில் இருந்து 1000 தக்காளி நாற்றுகளை வாங்கி நடவு செய்தோம். அப்போது தக்காளியின் விலை 10 ரூபாய் மட்டுமே. அதில் 400 நாற்றுகள் காலநிலை மற்றதால் பட்டு போயின. இருப்பினும் 600 நாற்றுகள் உயிர் பிழைத்தன. மேலும் செடிகள் சாயாமல் இருக்க பந்தல் கட்டி அதனை பார்த்து பராமரித்து வந்தோம்.

நாங்கள் அப்போது செய்ததற்கு நல்ல பயன் கிடைத்தது என்றும் அவர்கள் கூறினார்கள். குந்தா பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை தக்காளி விளைச்சலுக்கு ஏற்றது என்றும். மாட்டுச்சாணகளை  உரமிட்டு தக்காளியை சாகுபடி செய்தோம். இப்பகுதியில் வன விலங்குகள் தொந்தரவு அதிகம் என்றும் அவர்களை கூறினார்கள். வெளியூரில் இருந்தும் மக்கள் தக்காளியை அதிக விலைக்கு கேட்டு வந்தனர் ஆனால் உள்ளூர்மக்களுக்கே பற்றாக்குறையாக இருப்பதால் வெளியூர் மக்களுக்கு விற்க மனமில்லை என்றும் அவர் கூறினார்.

-விளம்பரம்-

இப்பகுதியில் காட்டெருமை, கடமான், கரடி, குரங்குகள் கூட்டமாக வந்து செடிகளை சேதப்படுத்தி வந்தது நாங்கள் அதை இரவு பகலாக பாதுகாத்து வந்தோம் அதற்க்கு பலன் தற்போது கிடைத்தது என்றும் அவர்கள் கூறினார்கள். வெளியில் தக்காளி 1 கிலோ 200 ரூபாய் விற்கப்பட்டலும் எங்களுக்கு 1 கிலோவிற்கு 80 ரூபாய் கிடைத்தால் போதும் என்றும் அவர்கள் கூறினார்கள்.                                   

Advertisement