சுப்ரமணியபுறம் படத்தில் பரமன் துளசியை கொன்றாரா இல்லையா ? அவரே சொன்ன பதில்.

0
13008
sasikumar

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வரும் இயக்குனர்கள் பலர் உள்ளனர் அந்தவகையில் இயக்குனரும் நடிகருமான சசிகுமாரும் ஒருவர். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் மூலம்தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெய் சசிகுமார் சமுத்திரகனி சுவாதி கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது. மேலும், இந்த திரைப்படம் நடிகர் ஜெய்க்கு ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவும் அமைந்திருந்தது. நட்பு காதல் மற்றும் துரோகம் போன்றவற்றை மையமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : தடை செய்யப்பட்ட டிக் டாக்கை மீண்டும் பயன்படுத்த இப்படி ஒரு ட்ரிக்ஸ்ஸா -வீடியோவ பாருங்க.

- Advertisement -

இந்தப்படத்தில் அழகர் என்ற கதாபாத்திரத்தில் ஜெய்யும் பரமன் என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரும் நடித்திருப்பார்கள் மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய் சுவாதியை வைத்து இறுதியில் கொலை செய்துவிடுவார் நடிகர் சமுத்திரகனி பின்னர் ஜெயின் இறப்பிற்கு காரணமான சமுத்திரக்கனி மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்குவது போல இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும் அதேபோல இந்த படத்தில் ட்ரெய்லர் வெளியான போது சுவாதியை சசிகுமார் கொள்வது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

ஆனால், இந்த காட்சி படத்தில் இடம்பெற்று இருக்காது இதுகுறித்து ரசிகர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ட்விட்டரில் கேட்கப்பட்டதற்கு இந்த காட்சி ட்ரெய்லருக்காக மட்டும் எடுக்கப்பட்ட காட்சி என்றும் இது படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சி இல்லை என்றும் சசிகுமார் பதிலளித்திருந்தார். தற்போது இன்றுடன் இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் சசிகுமார் செய்திருந்த அந்த குறிப்பிட்ட ட்வீட் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement