12th Fail படத்தின் ரியல் போலீஸ் அதிகாரிக்கு கிடைத்த பதவி உயர்வு – என்ன தெரியுமா?

0
319
- Advertisement -

12th பெயில் படத்தில் இடம்பெற்ற மனோஜ் சர்மாவை குறித்து பலரும் அறிந்திராத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியாகி இருந்த படம் 12த் பெயில். இந்த படம் நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பிரியான்ஷு சாட்டர்ஜி, விக்ராந்த் மாஸ்ஸி உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் மனோஜ் குமார் சர்மா கதாபாத்திரத்தில் விக்ராந்த் மாஸ்ஸி நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறியிருக்கும் மனோஜ் சர்மா உடைய வாழ்க்கை வரலாற்றை வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இனித்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் சர்மா குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் சர்மா.

- Advertisement -

12 th fail படம்:

இவர் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடன் படிக்கும் ஸ்ரத்தா ஜோஷி என்ற மாணவியை காதலித்து இருந்தார். தேர்வு முடிவுகள் வந்தவுடன் தன் காதலை சொல்லலாம் என்று காத்துக் கொண்டிருந்தார். ஆனால், தேர்வில் இவர் இந்தி பாடத்தை தவிர அனைத்திலும் தோல்வி பெற்றார். இந்த நேரத்தில் எப்படி தன்னுடைய காதலை சொல்வது என்று பயத்திலேயே இருந்தார். பின் ஒருவழியாக இவர் மன தைரியத்துடன் ஸ்ரத்தா ஜோஷி இடம் தன்னுடைய காதலை கூறியிருந்தார். சர்மாவின் காதலை ஸ்ரத்தா ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய காதலை சொல்லும் போது சர்மா, நீ என்னுடைய காதலை ஏற்றுக் கொண்டால் இந்த உலகத்தையே புரட்டி போடுவேன் என்று கூறியிருந்தார்.

மனோஜ் சர்மா குறித்த தகவல்:

ஸ்ரத்தா அவருடைய காதலுக்கு பச்சை கொடி காண்பித்த பிறகு ஷர்மா 12 ஆம் வகுப்பு தேர்வில் கடுமையாக படித்து தேர்ச்சி பெற்றார். பின் கல்லூரி படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு யுபிஎஸ்சி தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்தார். ஆனால், இவர் யுபிஎஸ்சி தேர்வு எழுத அவரிடம் பணம் இல்லை. இதனால் இவர் பார்ட் டைம்மாக டெம்போ ஒட்டியிருந்தார். சில சமயம் தங்கள் இடமில்லாமல் கூட நடைபாதையில் படுத்து தூங்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் டெல்லி நூலகத்தில் வேலை செய்து கொண்டே தேர்வுக்கு தேவையான புத்தகங்களை எல்லாம் எடுத்து படித்து தன்னை தயார் படுத்தினார்.

-விளம்பரம்-

ஐபிஎஸ் அதிகாரி மனோஜ்:

நான்கு முறை தொடர்ந்து தேர்வு எழுதி நான்காவது முறையில் தான் யுபிஎஸ்-ல் 121 வது இடத்தில் பெற்று தேர்ச்சி பெற்றார். மேலும், இவர் காதலித்த ஸ்ரத்தா ஜோஷியும் போட்டி போட்டு படித்து இன்று ஐ ஆர் எஸ் அதிகாரியாக இருக்கிறார். தற்போது ஷர்மா மகாராஷ்டிராவில் தான் பணியாற்றி வருகிறார். அது மட்டும் இல்லாமல் நான்கு முறை தேர்வு எழுதிய பிறகு தான் இவருக்கு இந்த பதவி கிடைத்தது. மேலும், இவர் ஐபிஎஸ் அதிகாரியான பிறகு மகாராஷ்டிராவில் முதல் மாவட்ட உதவி கண்காணிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கினார்.

மனோஜ் சர்மா பதிவு:

அதன் பிறகு இவர் கடுமையாக உழைத்து படிப்படியாக முன்னேறி இன்று ஐஜியாக உயர் பதவி பெற்று இருக்கிறார். இது தொடர்பாக மனோஜ் சர்மா அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் பல போராட்டங்களுக்கு பிறகு தான் மாவட்ட உதவி கண்காணிப்பாளராக என்னுடைய பணியை தொடங்கினேன். அதற்குப்பின் கடுமையாக உழைத்து இன்று ஐஜியாக உயர்ந்து இருக்கிறேன். இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்குமே நன்றி என்று கூறியிருக்கிறார்.

Advertisement