சிம்பு வீட்டிற்கு வந்த புதிய தேவதை – மகிழ்ச்சி ஒரு பக்கம் ஏக்கம் ஒரு பக்கத்தில் TR

0
630
Str
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகருமான டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பிறகு கடந்த ஆண்டு இவரின் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும், சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

மாநாடு படம்:

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படமும் ஹிட் அடித்தது.

பத்து தல :

இந்த நிலையில் தற்போது இயக்குனர் கே. கிருஷ்ணா இயக்கத்தி நடிகர் சிம்பு “பத்து தல” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வரும் மார்ச் மாதம் 30 தேதி இப்படம் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் சிம்பு சமீபத்தில் வெளியான விஜய் நடித்த “வாரிசு” படத்திலும் “தீ” பாடலை பாடியிருக்கிறார். இப்பாடல் பெரிய ஹிட் அடித்து என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சிம்பு தங்கை :

வாரிசு படத்திற்கு பாடல் பாடிய நிலையில் தான் அவருடைய வீட்டில் ஒரு வாரிசு பிறந்திருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி இருகிறது. சிம்புவிற்கு குரலரசன் என்கிற தம்பியும், இலக்கியா என்ற தங்கையும் உள்ளனர். இதில் தங்கை இலக்கியாவிற்கு திருமணமாகி ஏற்கனவே அபி ஜேசன் என்கிற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான் சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இரண்டாவது குழந்தை :

தன்னுடைய தங்கை இரண்டாவது குழந்தை பெற்றுள்ளார் என்ற தகவலை நடிகர் சிம்பு தன்னுடைய சோசியல் மீடியாவில் மூலம் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்துள்ளதை உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு புதிதாக வாரிசு வந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடித்துள்ளார். அதே சமயம் சிம்புவிற்கு இன்னும் பெண் கிடைக்காமல் இருப்பதால் கொஞம் வருத்தத்தில் இருக்கிறாராம் சிம்புவின் தந்தை டி ஆர்

Advertisement