கோவிலுக்கு போறத விட ஸ்கூலுக்கு போறது தான் முக்கியம் – வைரலாகும் 13 வயது வட இந்திய சிறுவனின் பேச்சு.

0
553
- Advertisement -

ராமர் கோயில் குறித்து 13 வயது சிறுவன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு முழுவதும் காண வருகை தந்துள்ளனர். மேலும், இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்தியா முழுவதும் இந்த நாளை அனைவருமே சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள்.

- Advertisement -

அயோத்தி ராமர் கோவில்:

மேலும், ராமர் கோயில் குறித்து பிரபலங்களும், மக்களும் கூறும் கருத்துக்கள் தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோயில் குறித்து 13 வயது சிறுவன் ஆதர்ஷ் ராஜ் பேசிருக்கும் வீடியோ தான் வைரலாகி வருகிறது. அதாவது, பிரபல சேனலின் நிருபர் ஒருவர், கோயில் பூசாரி பூசாரி போல இருக்கும் நபரிடம் கோவில் திறப்பு குறித்து கேட்டிருந்தார். அதற்கு அருகில் இருந்த ஆதர்ஷ் ராஜ் சிறுவன், கோயில்களினால் பிச்சைக்காரர்கள் தான் பெறுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

சிறுவன் பேசிய வீடியோ:

உடனே அந்த நிருபர் சிறுவனை அழைத்து, எதற்கு இப்படி சொன்னாய்? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு சிறுவன், கடவுள் எதுவும் கொடுப்பதில்லை. நம் கையில் தான் இருக்கிறது. நாம் கடின முயற்சியுடன் படித்தால் வேலை கிடைக்கிறது. படிக்க வில்லை என்றால் வேலை கிடைக்காது. நாம் பள்ளிக்கு சென்றால்தான் நமக்கு ஏற்ற வேலை கிடைக்கும். அதனால்தான் நான் கோயிலுக்கு போவதற்கு பதில் பள்ளிக்கு செல்கிறேன் என்று கூறியிருந்தார். பின் அந்த நிருபர், நீ படிப்பாயா? என்ன படிக்கப் போகிறாய்? என்று கேட்டதற்கு அந்த சிறுவன், நான் ஐஏஎஸ் படிப்பேன். யுபிஸ்க்கு தயாராகுவேன். ஐஏஎஸ் படித்து மாயாவதி போல மக்களுக்கு சேவை செய்வேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

நிருபர் கேள்வி:

உடனே நிருபர், பள்ளி முக்கியமா? கோயில்கள் முக்கியமா? என்று கேட்டவுடன் அந்த சிறுவன், பள்ளிகள் தான் முக்கியம். கடவுளை கும்பிடுவதற்கு பதில் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் கும்பிட்டு விட்டு செல்வேன். கடவுளின் ஆசிர்வாதம் தேவையில்லை என்று கூறுகிறான். பின் அந்த நிருபர், 13 வயதில் எப்படி இவ்வளவு புத்திசாலியாக இருக்கிறாய்? என்று கேட்கிறார். அதற்கு சிறுவன், நான் பள்ளிக்கு செல்கிறேன். என்னுடைய கிராமத்தில் உள்ள யாருமே கோயில்களுக்கு செல்ல மாட்டோம். ஒரு கோயில் கூட எங்கள் கிராமத்தில் இல்லை என்று சொல்கிறார்.

சிறுவன் நச் பதில்:

மேலும், அந்த நிருபர், உன்னுடைய ஜாதி என்ன? என்று கேட்டதற்கு அந்த சிறுவன், நான் தலித். பாபாஷாகிப் அம்பேத்கர் நமக்கு அரசியலமைப்பை வகுத்துக் கொடுத்தார், இட ஒதுக்கீட்டை கொடுத்தார். ராமர் என்ன கொடுத்தார்? என்று துணிச்சலுடன் கேட்டிருக்கிறார். இப்படி தைரியமாக அந்த சிறுவன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து சிலர், ஏற்கனவே இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர், எதுவாக இருந்தாலும் அந்த சிறுவனின் துணிச்சல் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டி வருகிறார்கள்.

Advertisement