சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் சர்ச்சை குறித்து இயக்குனர் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனியார் டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார்.
அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவர் படத்தில் சிறு சிறு காட்சியில் தோன்றியிருந்தார். பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். இதனை அடுத்து இவர் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.
சந்தானம் நடிக்கும் படங்கள்:
பின் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான படம் குலு குலு. இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி இருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை .சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ . இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் வெளியான படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் “கிக்”. இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி இருந்தது.
வடக்குப்பட்டி ராமசாமி படம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதன் பின் சந்தானம் அவர்கள் இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் பெயரில்லாத ஒரு படத்திலும், தில்லுக்கு துட்டு பாகம் 3லும் நடிக்கிறார். அந்த வகையில் தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானதிற்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.
படத்தின் சர்ச்சை:
இந்த படத்தில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம் எஸ் பாஸ்கர், ரவி மரியா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பீப்பிள் மீடியா பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்குஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் வரும் பெரியார் குறித்த காட்சி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது.‘
இயக்குனர் விளக்கம்:
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் கார்த்தி யோகி, இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படம் தான். 1974 ஆம் ஆண்டு பின்னணியில் ஒரு கற்பனை கிராமத்தில் நடப்பது போல கதையை வைத்திருக்கிறோம். கிராமத்தின் நையாண்டியால் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஏற்படும் பிரச்சனை எங்கு போய் முடிகிறது என்பதுதான் படம். அதிக காமெடி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தில் எந்த சர்ச்சை காட்சிகளும் கிடையாது. யார் மனதும் புண்படும் வகையிலும் காட்சிகள் இல்லை. படம் பார்க்கும்போது அது உங்களுக்கே புரியும். படத்தை 63 நாளில் எடுத்து முடித்தோம். இது எல்லோருக்குமே படமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.