கெளதம் கார்த்திக், புகழ் நடித்துள்ள ’16 ஆகஸ்ட் 1947′ எப்படி இருக்கிறது ? – முழு விமர்சனம் இதோ.

0
557
1947
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பல வருடங்களாக பணிபுரிந்த என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் ஆகஸ்ட் 16 1947. இந்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் தயாரித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ரேவதி, புகழ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு செங்காடு என்னும் கிராமத்தில் வாழும் மக்களை ராபர்ட் கிளைவ் என்பவர் அடிமை போல் நடத்துகிறார். இதனால் அந்த ஊர் மக்களுக்கும் ராபர்ட் கிளைவுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் கௌதம் கார்த்திக்கின் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் இருந்து கதை தொடங்குகிறது. எந்த ஒரு வெளியுலக தொடர்பும் இல்லாத கிராமம் தான் செங்காடு. இங்கு பருத்தி நூல் வளம் அதிகமாக நிறைந்து கிடைக்கிறது. இந்த ஊர் மக்களும் பருத்தி நெய்து அதில் வரும் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வேலை செய்யும் மக்களுக்கு சோறு, தண்ணீர் கொடுக்காமல், சிறுநீர் கூட கழிக்க கூட விடாமல் 16 மணி நேரம் ராபர்ட் கிளைவ் என்ற அரக்கன் வேலை வாங்குகிறார். இவரை எதிர்த்து நிற்பவருக்கு அவர் கொடூரமாக தண்டனை கொடுக்கிறார்.

- Advertisement -

இதனால் பல பேரையும் கொலையும் ராபர்ட் செய்து வருகிறார். மேலும், வேலை செய்பவர்கள் மீது சவுக்கடி, சுடுநீர் அபிஷேகம் செய்கிறார். அதோடு ராபர்ட்டின் மகன் ஜஸ்டின் தன் கண்ணில் படும் பெண்களை எல்லாம் துப்பாக்கிக் கொண்டு வன்கொடுமைகளை செய்து வருகிறார். இவர்கள் செய்யும் கொடுமைகளுக்கெல்லாம் அந்த ஊரின் உடைய ஜமீன்தாறும் உடந்தையாக இருக்கிறார். பின் ஜமீன்தாரின் மகளையும் ஒரு கட்டத்தில் ராபர்ட்ரின் மகன் ஜஸ்டின் வன்கொடுமை செய்கிறார்.

அப்போது ஜமீன்தார் மகளின் சிறு வயது நண்பனும், படத்தின் ஹீரோவும் ஆன கௌதம் கார்த்திக் ஜஸ்டினை கொல்கிறார். இன்னொரு பக்கம், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது இந்த விஷயம் ராபர்ட்க்கு தெரிகிறது. ஆனால், அதை அந்த கிராம மக்களிடம் இருந்து மறைக்கிறார். மேலும், தன்னுடைய மகன் ஜஸ்டின் இறந்த செய்தியை அறிந்து அவனை கொன்ற கௌதம் கார்த்திகை பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் கௌதம் கார்த்திக் நிலை என்ன? செங்காடு மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தி தெரிந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

சுதந்திர காலத்திற்கு ஏற்ப காட்சிகளும், ஆடைகளும் இருப்பது படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்திருக்கிறது. அந்த காலத்தில் உபயோகப்படுத்திய பொருள்கள் முதல் மக்கள் பேசும் வார்த்தைகள் வரை என ஒவ்வொன்றையும் படக்குழு கவனித்து இருக்கிறது. குறிப்பாக, அரண்மனை, கூரை வீடு என அனைத்தும் கதைக்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பது பாராட்டுகளை பெற்றிருக்கிறது. படத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருப்பது பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

மேலும், பத்துதல படத்திற்கு பிறகு கௌதம் கார்த்திக்கு இந்த படம் ஒரு நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது. 1947 ஆம் ஆண்டில் நடக்கும் காட்சிகள் நம்மை சுதந்திர காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறது. அடுத்து என்ன நடக்கும்? என்ற பல எதிர்பார்ப்புகளுடனே பார்வையாளர்களை வைக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால், சில தேவையற்ற காட்சிகள் வருகிறது. ஆங்காங்கே சில காட்சிகள் தோய்வுகளை ஏற்படுத்தினாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குனர்.

இது இவருடைய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு பிரமாதமாக கொடுத்திருக்கிறார். கூடிய விரைவில் இவரும் பிரபலமான இயக்குனர்களின் பட்டியல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தம், ஒரு நல்ல வரலாற்று பின்னணி கொண்ட கதையாக ஆகஸ்ட் 16 1947 அமைந்திருக்கிறது.

நிறைகள் :

கௌதம் கார்த்தியின் நடிப்பு சிறப்பு

கதைக்களத்தை இயக்குனர் கொண்டு சென்ற விதம் சூப்பர்

கிளைமாக்ஸ் காட்சி அருமை

படத்தில் நடிகர்கள் நடிப்பு

ஒரு சிறப்பான வரலாற்று பின்னணி கொண்ட கதை

குறைகள் :

இரண்டாம் பாதி இடைவெளிக்கு பின் சில தேவையில்லாத காட்சிகள்

ஆங்காங்கே சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதான குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் ஆகஸ்ட் 16 1947 – வெற்றி தான்

Advertisement