பிளாப் ஆனதால இனி விஜய வச்சி படம் எடுக்கமாடன்னு சொல்லிடாறு. விஜய் அடம் பிடிச்ச அப்ப பெல்ட்டால அடிச்சாரு- விஜய் கடந்து வந்த பாதை.

0
5817
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக அறிமுகம் ஆகி இன்று தளபதி என்ற அந்தஸ்துடன் இருக்கும் நடிகர் விஜய் தனது திரை பயணத்தில் 28 ஆண்டுகளை எட்டியுளளார். இதை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில் ட்விட்டரில் 28YearsOfBelovedVIJAY என்ற ஹேஷ் டேக் கூட ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பற்றி தயாரிப்பாளர் கலைஞானம் பேசிய வீடியோ தான் இது. தமிழ் திரை உலகில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைஞானம். இவர் 1960 களில் இருந்து 1990 வரை 200 திரைப்படங்களுக்கு மேல் கதை எழுதியுள்ளார். 18 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் சினிமா திரையுலகில் திரைப்பட இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

-விளம்பரம்-
Image result for Actor Vijay Famliy

அதில் விஜயின் அப்பா சந்திரசேகர் வாடைக்கு கூட வீடு எனக்கு கொடுக்க வில்லை என்று மனவேதனையுடன் பேட்டியில் கூறி உள்ளார். 1997 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் அப்பாவான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் பிரபல தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களை சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்று உள்ளார்.அவர் விஜய் ஹீரோவாக வைத்து தான் எடுத்த இரண்டு படங்களும் தோல்வி அடைந்தது. இரண்டு வீடுகளையும் விற்றுவிட்டேன். தற்போது மூன்றாவது முறையாக படம் எடுத்துள்ளேன். அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

- Advertisement -

அப்போது பிரபல தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள், நீங்கள் விஜய் படத்தில் நடிப்பேன் என கூறியதால் பெல்டால் விஜயை அடித்தீர்களாமே, பிறகு விஜய் நான் நடித்தே தீருவேன் என கூறி வீட்டை விட்டு கிளம்பி விட்டார். அதற்குப் பிறகு சோபா விஜயை சமாதனம் செய்து ஒரே ஒரு படம் மட்டும் தயாரிக்க எஸ்.ஏ. சந்திரசேகரை ஒப்புக்கொள்ள சமாதானம் செய்தார். இந்த விஷயத்தை எஸ் ஏ சந்திரசேகர் வீட்டிலிருந்த எழுத்தாளர் தன்னிடம் கூறியதாக கலைஞானம் கூறியுள்ளார்..

வீடியோவில் 16 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இப்படி சொல்லிவிட்டு கலைஞானம் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுக் கொண்டதால் விஜயை வைத்து புது படம் தயாரிக்க சம்மதித்தார்.பின் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களே விஜய் படத்தை இயக்க முடிவு எய்தார். பின் கதை இல்லாததால் நான் தான் ஒரு கதையை எஸ் ஏ சந்திரசேகருக்கு கொடுத்து இயக்க சொன்னேன். அதற்காக தற்போது வரை எஸ்.ஏ.சந்திரசேகர் எந்த பணமும் தரவில்லை. அதன் பிறகு விஜய் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்தார்.

Advertisement