#30YearsOfARRahman – ரோஜா பட இசைவெளியீட்டு விழா – ஏ ஆர் ரஹ்மானை அறிமுகம் செய்து வைத்த பாலசந்தர். அவரின் முதல் ரெக்கார்டிங் வீடியோ இதோ.

0
672
ARRahman
- Advertisement -

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். சினிமா உலகில் இசை புயல் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து வரும் ஏ ஆர் ரஹமான் திரைத்துறையில் அறிமுகமாகி இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான். மேலும், தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காதவர். பல மேடைகளில் தமிழுக்காக இவர் குரல் கொடுத்திருக்கிறார். மேலும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர்.

- Advertisement -

ஆஸ்கர் நாயகன்:

தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர் ரகுமான். அமைதியான சுபாவம் கொண்ட ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசையால் அனைவரையும் பேச வைத்தார். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ஏ.ஆர். ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் என பாடல்களை கொடுத்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார் ஏ ஆர் ரஹ்மான். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏ ஆர் ரஹ்மான் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இப்ப இருக்கிற இசை இளைஞர்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் வாத்தியார் என்று சொல்லலாம். தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கிறார். இந்நிலையில் இன்று திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கும் ஏ ஆர் ரகுமானின் ரோஜா படத்தின் ஆடியோ லான்ச் வெளியீட்டின் வெளியிட்டு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ரோஜா படம் இசை வெளியீட்டு விழா:

ரோஜா படத்தின் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். ரோஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது படக் குழுவினர் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது இயக்குனர் இமயம் கே பாலசந்தர் அவர்கள் ஏ ஆர் ரகுமானை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு மிக அற்புதமான இசை கலைஞரை மணிரத்தினம் கண்டுபிடித்திருக்கிறார். இத்தனை நாள் இவர் எங்கு இருந்தார்? என்று தெரியவில்லை. யார் கண்ணுக்கும் சிக்கவில்லை?

ஏ.ஆர்.ரகுமான் குறித்து கூறியது:

இவர் மணிரத்தினம் கண்ணிற்கு மட்டும் சிக்கி இருக்கிறார்? இவர் 50- 60 வயது உடைய, ஆறு மாதமாக வளர்ந்து இருப்பவர் என்று கூறி ஏ ஆர் ரகுமானை அழைத்திருக்கிறார். அப்போது ஏ ஆர் ரகுமான் இளம் வயதில் இருந்தார். இந்த இளம் வயதில் இசையில் புலமை பெற்று இருக்கிறார் என்று ஏ ஆர் ரகுமானை பாராட்டி இருந்தார். அதே போல ரோஜா படத்தின் முதல் ரெக்கார்டிங்கின் வீடியோவும் கிடைக்கப்பெற்று இருக்கிறது. அதில் அவருடன் ஒரு சிறுவனும் இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை ரஹ்மானின் அக்கா மகன் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தான்.

Advertisement