30ஆண்டுகளை நிறைவு செய்த விஜய், 30 பிறந்த குழந்தைகளுக்கு தரமான பரிசை அணிவித்த விஜய் ரசிகர்கள்

0
434
- Advertisement -

விஜய் மக்கள் இயக்கத்தினர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்தார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதோடு பெரிய அளவிலும் இந்த படம் வசூல் செய்யவில்லை. தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தளபதி 67 படம் :

சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். அதே போல அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் அவர்கள் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

விஜய் மக்கள் இயக்கம்:

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நடிகர் விஜய் அவர்கள் சினிமா திரைத்துறையில் நுழைந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு தான் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை மக்களுக்கு செய்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்திருக்கின்றனர். ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட சார்பில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கியிருந்தார்கள்.

விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி:

இதை தொடர்ந்து தற்போது தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் அடையாறு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து இருக்கின்றனர். மேலும், இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து இருக்கிறார். இது மட்டுமில்லாமல் சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு குளிர்காலத்தை முன்னிட்டு இலவச போர்வைகளும் வழங்கி இருக்கின்றனர். குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி போன்றவற்றையும் பல்வேறு இடங்களில் வழங்கி வருகின்றனர்.

Advertisement