அம்மாவாக நடித்த காந்திமதி, நீக்கப்பட்ட பாடல், குழந்தையை கொன்ற புலி – கமலை உருவக்கேலி செய்ததால் உருவான படத்தின் அறிந்திராத பக்கம்.

0
701
kamal
- Advertisement -

உலக நாயகன் கமலஹாசன், தமிழ் திரை உலகை தாண்டி இந்தி சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தவர். இவரது நடிப்பில் வெளியான எத்தனையோ திரைப்படங்கள் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. அந்த வகையில் இதே நாளில் கடந்த 1989 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் தமிழ், தெலுகு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் நடிகர் கமல் அப்பா மற்றும் 2 மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதிலும் தொழில்நுட்பம் பெரிதாக இல்லாத காலகட்டத்திலேயே இந்த படத்தில் குள்ளமாக நடித்து பலரை வியக்கவைத்தார்.

-விளம்பரம்-

இதை கமல் எப்படி சாத்தியமாக்கினார் என்பது இன்றும் ஒரு புரியாத புதிரே. மேலும், இந்த படத்தை எடுத்ததற்கான காரணத்தை கமல் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். நடிகர் கமல், அப்பு கதாபாத்திரத்தில் நடித்ததற்கு முக்கிய காரணமே அவரின் உண்மையான உயரத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம் தான் என்று தெரிவித்து இருந்தார். அந்த பேட்டியில் ”நான் இந்தி சினிமாவில் நடித்து வந்த போது, என்னிடம் சிலர் நீங்கள் அமிதா பச்சனை போன்று உயரமாக இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் பாலிவுட்டில் நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார்கள்.

- Advertisement -

அவர்கள் அப்படி சொன்னது என்னை மிகவும் பாதித்தது. அப்போது தான் எனக்கு திறமை இருக்க உயரம் ஒரு தடையா என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அதனால் தான் என்னுடைய உயரத்தை குறைத்து அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தேன். அப்படி உருவானது தான் அந்த படம்’ என்று கூறி இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் கமல் பாலிவுட்டில் கூட பல படங்களில் நடித்தார்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் முதல் பாடலான ‘ராஜா கைய வச்சா’ பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால், உண்மையில் ஆனால், அந்தப் பாடலுக்கு பதில் ‘அட உங்க அம்மா வா பார்த்த காலைத் தொட்டுக் கும்பிடுவேன்’ என்ற பாடல் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலில் நடிகை காந்திமதி அவர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை. இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் ஒளிபரப்பப் பட்டது என்று கூறப்படுகிறது. அதே போல் நடிகை காந்தி மதி அவர்களும் நடிக்கவில்லை. கமல்ஹாசனுக்கு அம்மாவாக மனோரமா நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இந்த படத்தில் வரும் புலி குறித்து ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்து இருந்தார்.

அந்த பேட்டியில் பேசிய அவர் ‘அந்த காலத்தில் Cg எல்லாம் கிடையாது. அதே போல மானிடர் கூட கிடையாது அந்த சமயத்தில் என்ன நடிக்கிறோமோ அதான். அந்த வகையில் அந்த படத்தில் வரும் புலி, அந்த காட்சியில் நடிகர் கமல் முட்டி வரை புதைக்கப்பட்டு இருந்தார். அந்த புலியின் ட்ரைனர் என் அருகில் இருந்தார். அந்த ஷாட் எடுக்கும் போது தான் மேனேஜர் கல்கத்தாவில் நடந்த ஒரு விஷயத்தை சொன்னார்.

அந்த புலி, சர்க்கஸில் இருக்கும் போது ஒரு குழந்தை ஒன்று திடீரென்று ஓடி போகும் போது அந்த புலி அந்த குழந்தை மீது பாய்ந்து அந்த குழந்தைக்கு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது என்று கூறி இருந்தார். இத்தனை கஷ்டங்களை தாண்டியே இந்த படத்தில் நடித்தார் கமல். மேலும், அவரது கஷ்டத்திற்கு பலனாக இந்த படம் பல சாதனைகளை செய்தது. அதிக பார்வையாளர்கள் பார்த்த படம் என்று சிவாஜி நடித்த #திரிசூலம் செய்த சாதனையை முறியடித்தது.

எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை சென்னை தேவிபாரடைஸில் 197 நாட்கள் ஓடி முறியடித்தது. 0 தியேட்டர்களில் 20 வாரங்களுக்கு மேல் ஷிப்டிங் ஆகாமல் ரெகுலர் காட்சிகளில் ஓடிய ஒரே தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது. தமிழகம் கர்நாடகா ஆந்திரா கேரளா என 4 மாநிலத்தில்ரெகுலர் ஷோவில் 100நாட்கள் ஓடிய முதல் தமிழ்படம் அபூர்வ சகோதரர்கள் படம் தான் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

Advertisement