களத்தில் சந்திப்போம் படத்தை காண ஆரி, சனம் மட்டும் ஏன் வரல – அழைக்கவில்லையா ஜித்தன் ரமேஷ் ? காரணம் இதானாம்.

0
50386
BB
- Advertisement -

ராஜசேகர் இயக்கியுள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 5) வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன், பாலா சரவணன், ராதாரவி என்று பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தினை ஜீவாவின் தந்தை ஆர் பி சௌத்ரி தயாரித்துள்ளார். ஜீவாவும் அருள்நிதியும் கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். இவர்கள் இருவர்களின் வாழ்க்கையில் காதல், திருமணம் என்கிற கட்டம் வரும்போது அரங்கேறும் குழப்பங்கள், அது இவர்கள் நட்பை பாதிக்கும் விதம், அதிலிருந்து இவர்கள் இருவரும் மீண்டு வருவதே கதை.

-விளம்பரம்-

இந்த படத்தினை தயாரித்த ஆர் பி சௌத்ரி ஜித்தன் ரமேஷின் தந்தை, அதே போல் படத்தில் நடித்துள்ள ஜீவா,ஜித்தன் ரமேஷுக்கு தம்பி என்பது பலரும் அறிந்த ஒன்று. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தினை பார்ப்பதற்காக பிக் பாஸில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜித்தன் ரமேஷ். மேலும், இதை ஒரு Gettogther போல அமைத்து இருந்த போட்டியாளர்கள் படத்தை பார்த்த பின்னர் சில போட்டியாளர்களின் வீட்டிற்கும் சென்று இருந்தனர்.

- Advertisement -

இந்த சந்திப்பில் பிக் பாஸ் 4-ல் பங்கேற்ற பெரும்பாலான போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால், ஆரி, சுச்சி, சனம் ஆகியோர் மட்டும் பங்கேற்கவில்லை. அதே போல இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட பகிர்ந்தனர். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இருக்க ஆரி, சனம் மட்டும் அந்த புகைப்படங்களில் இல்லை. இதனால் ஜித்தன் ரமேஷ் இவர்களுக்கு அழைப்புவிடுக்கவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இப்படி ஒரு நிலையில் இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் அனிதா சம்பத். அதில் சில போட்டியாளர்கள் பிஸியாக இருப்பதாலும், ஒரு சிலரை தொடர்புகொள்ள முடியவில்லை என்பதாலும் அவர்களால் வர முடியவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பை என்ஜாய் செய்தோம். அளித்தமைக்கு நன்றி ஜித்தன் ரமேஷ் என்று பதிவிட்டுள்ளார் அனிதா.

-விளம்பரம்-
Advertisement