68வது தேசிய திரைப்பட விருது – சூரரை போற்று முதல் மண்டேலா வரை ஆதிக்கம் செலுத்திய தமிழ் படங்கள். இதோ லிஸ்ட்.

0
1380
National Award
- Advertisement -

68வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் வெளியாகி உள்ள தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 67வது தேசிய திரைப்பட விருதுகள் நடைபெற்றது. அதில் 2019 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டு இருந்தது. அதில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அசுரன் படத்துக்காக தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குனர் வெற்றிவேல் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது.

-விளம்பரம்-

பின் தனுஷ், விஜய் சேதுபதி என பல நடிகர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. தற்போது 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1 2020 மற்றும் டிசம்பர் 31 2020 க்கு இடையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட சிறப்பு மற்றும் அம்சம் அல்லாத திரைப்படங்கள் திரைப்பட விருதுகளுக்கு தகுதி பெற்றன. எப்போதும் தேசிய திரைப்பட விருதுகள் மீது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

- Advertisement -

தேசிய திரைப்பட விருதுகள்:

ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எது என்று நடுவர்களால் தேர்வு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. தற்போது விருதுக்கான இறுதிப் பட்டியலை நிறைவு செய்து தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இடம் தேர்வு குழுவினர் வழங்கி இருக்கின்றனர். அதன்படி தற்போது தேர்வாகியுள்ள படங்களின் பட்டியல்,

விருது பெற்ற படங்கள்:

சிறந்த படம் – சூரரைப் போற்று

-விளம்பரம்-

சிறந்த தமிழ்ப்படம் – சிவரஞ்சனியும் சில பெண்களும்

சிறந்த நடிகர்- சூர்யா (சூரரைப் போற்று), அஜய் தேவ்கன் (Tanhaji)

சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறந்த இயக்குநர் – அய்யப்பனும் கோஷியும் இயக்குநர் சச்சி

சிறந்த அறிமுக இயக்குநர் – மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த துணை நடிகர் – பிஜு மேனன்

சிறந்த துணை நடிகை – லக்ஷ்மிபிரியா சந்திரமெளலி ( சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ் (சூரரைப் போற்று), தமன் (அலவை குந்தபுரம்- தெலுங்கு)

சிறந்த திரைக்கதை – சூரரைப் போற்று ( சுதா கொங்கரா & சாலினி உஷா நாயர் )

சிறந்த வசனம் – மடோன் அஸ்வின் ( மண்டேலா )

சிறந்த படத்தொகுப்பாளர் – ஸ்ரீகர் பிரசாத் (sreekar prasad) (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த பின்னணி இசைப் பாடகி – நஞ்சம்மா (ஐயப்பனும் கோஷியும்-மலையாளம்)

சிறந்த பின்னணி இசைப் பாடகர் – ராகுல் தேஸ்பண்டே

இந்திரா காந்தி விருது – மண்டேலா

சினிமாவிற்கு உகந்த மாநிலம்- மத்திய பிரதேசம்

மேலும், இந்த முறை சூர்யாவின் சூரரை போற்று படம் 5 பிரிவுகளில் விருதுகளை தட்டி சென்று இருக்கிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement