தமிழ் திரையுலகில் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘ஜெயம்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக இயக்குநர் மோகன் ராஜாவின் தம்பியும், நடிகருமான ரவி நடித்திருந்தார். ரவிக்கு ஜோடியாக சதா டூயட் பாடி ஆடியிருந்தார். மேலும், கோபிசந்த், ராஜீவ், பிரகதி, நிழல்கள் ரவி, நளினி, கல்யாணி, செந்தில், ரமேஷ் கண்ணா, மயில் சாமி, இளவரசு, மனோபாலா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் மிக முக்கிய காமெடி ரோலில் நடிகர் சுமன் ஷெட்டி நடித்திருந்தார். அவர் ‘அலி பாபா’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார்.
இந்த படத்தில் நடிகர் சுமன் ஷெட்டியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இது தான் நடிகர் சுமன் ஷெட்டி தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்புவின் ‘குத்து’, ரவி கிருஷ்ணாவின் ‘7/G ரெயின்போ காலனி, கேடி’, சிபி ராஜின் ‘மண்ணின் மைந்தன்’, பரத்தின் ‘பிப்ரவரி 14’, விஷாலின் ‘சண்டக்கோழி, தோரணை’, ‘தல’ அஜித்தின் ‘வரலாறு’, தனுஷின் ‘படிக்காதவன்’, பரிமலின் ‘ஓடிப்போலாமா’, சுஜிவ்வின் ‘விரட்டு’, பாஸின் ‘தலைவன்’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகர் சுமன் ஷெட்டி.
இதையும் பாருங்க : அட கொடுமையே, இறுதியில் உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ள ஜீவா பட நடிகை. வைரலாகும் வீடியோ.
இந்த அனைத்து படங்களிலுமே காமெடியனாக கலக்கியிருந்தார். கடைசியாக சுமன் ஷெட்டி நடித்த தமிழ் திரைப்படம் ‘விளம்பரம்’. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தினை இயக்குநர் கே. சூர்யநிதி இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக அபிநய் என்பவர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.
மேலும், முக்கிய வேடங்களில் ஹைரா, தம்பி இராமையா, சோனா, புவனா, ரித்தீஷ் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் சுமன் ஷெட்டி பிரபல காமெடியனாக வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடிகர் சுமன் ஷெட்டியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வெளி வந்திருக்கிறது. இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.