தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. சாதாரண மேடை கலைஞசராக தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் தொகுப்பாளராக மாறி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார்.நடிகர் சிவகார்த்திகேயன் அஜித் நடித்த ஏகன் படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் மரினா படத்தில் நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு முதல் படம் என்றால் அது தனுஷ் நடித்த 3 படம் தான்.
அந்த படத்திற்கு பின்னர் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் சிவகார்த்திகேயன் நடித்தாலும் இவரது திரைப்பயணத்தில் மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்தது எதிர்நீச்சல் திரைப்படம் தான். இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. இந்தநிலையில் இந்த படத்தை இயக்கிய துரை செந்தில் இந்த படத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
எதிர்நீச்சல் படத்தை இயக்கியவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் ஆடுகளம் படத்தின் போதே இந்த படத்தின் கதையை வெற்றி மாறனிடம் சொல்லியிருக்கிறார். அதை தனுஷிடம் கூறி இருக்கிறார் வெற்றிமாறன் ஆனால் அந்த ப்ராஜக்ட் கைகூடாமல் போயுள்ளது. அதன் பின்னர் 3 படத்தின் போது வெற்றிமாறன் துரை செந்தில்குமார் இடம் தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் எடுப்பதாக இருக்கிறார் நீ போய் தனுஷை வார் என்று கூறியுள்ளார் வெற்றிமாறன்.
அதன் பின்னர்தான் துரைசெந்தில். தனுஷை சந்தித்து கதையை கூறியுள்ளார். அவருக்கு இந்த கதை பிடித்துப்போக சிவகார்த்திகேயனிடம் இந்த கதையை சொல்லச் சொல்லியுள்ளார் தனுஷ். சிவகார்த்திகேயன் இடமும் கதையை கூற அவரும் ஓகே சொல்ல இப்படி தான் ஆரம்பித்ததாம் எதிர்நீச்சல் படம். இதுகுறித்து துறை செந்தில் மேலும் கூறியுள்ளதாவது, இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் தனுஷ் சார், ஹீரோவுக்கும் மியூசிக் டைரக்டருக்கும் மட்டும்தான் சாய்ஸஸ் கொடுக்கலை.
சிவகார்த்திகேயனை ஹீரோவா வெச்சுத்தான் படம் பண்ணணும்னு அவர் முடிவு பண்ணிட்டார். அதே மாதிரி, ‘அனிருத்தையே இந்தப் படத்துக்கு இசையமைப்பாளரா வெச்சுக்கோங்க ஏன்னா அவனுக்கு தான் சம்பளம் தரத்தேவை இல்லை என்று சொன்னார். மேலும், இந்த படத்தில் நடிக்க சமந்தா மற்றும் அமலா பாலை அணுகினோம் ஆனால், அவர்களுக்கு டேட் இல்லாததால் பிரியா ஆனந்தை கமிட் செய்தோம் என்று கூறியுள்ளார் துறை செந்தில்.