சந்தானத்தின் 80ஸ் பில்டப் எப்படி ? விமர்சனத்தோடு ரசிகர்களின் கருத்து கணிப்பும்.

0
550
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சந்தானம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் 80ஸ் பில்டப். இந்த படத்தை கல்யாண் இயக்கி இருக்கிறா. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி பாணியில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ராதிகா பிரித்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் தங்கதுரை, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் சந்தானத்தின் 80ஸ் பில்டப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சந்தானம் கமலின் தீவிர ரசிகராக நடித்து இருக்கிறார். 80களில் நடக்கும் கதை. சந்தானமும் அவருடைய தங்கை சங்கீதாவும் எப்போதும் எதிரும் புதிதாக சண்டை போட்டுக்கொண்டு சவால் விட்டுக் கொண்டே இருப்பார்கள். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று இவர்களுக்குள்ளே மோதல் அதிகமாக இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் தான் சந்தானத்தின் தாத்தா இறந்து விடுகிறார். அனைவருமே சாவு வீட்டுக்கு செல்கிறார்கள்.

- Advertisement -

அப்போது உறவுக்கார பெண்ணாக ராதிகா ப்ரீத்தி வருகிறார். இவரைப் பார்த்ததுமே சந்தானத்திற்கு காதல் ஏற்படுகிறது. அப்போது இவர் தன்னுடைய தங்கையிடம் சாவு வீட்டின் காரியங்கள் முடிவதற்குள்ளே நான் ராதிகாவிடம் ப்ரபோஸ் செய்வேன் என்று சவால் விடுகிறார். இந்த சவாலில் சந்தானம் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை தான் காமெடி பாணியில் இயக்குனர் சொல்லி இருக்கிறார். படத்தில் கமல் ரசிகராக வரும் சந்தானம் கமல் மேனரிசத்தை விட ரஜினியின் மேனரிசம் தான் அதிகமாக செய்திருக்கிறார் என்று சொல்லலாம்.

பல காமெடிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. சந்தானத்தின் நண்பர்களாக வருபவர்கள் செய்யும் காமெடிகள் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கோபம் வரும் அளவுக்கு காமெடி பண்ணாதீர்கள் என்று பார்வையாளர்களே கொந்தளிக்கும் அளவிற்கு படத்தில் காமெடிகள் இருக்கிறது. இவரை அடுத்து தங்கையாக வரும் சங்கீதாவின் கதாபாத்திரம் ஓகே. வழக்கம்போல அண்ணன்- தங்கை சண்டையை கலகலப்பாக இயக்குனர் காண்பித்திருக்கிறார். இவர்களை அடுத்து கதாநாயகியாக வரும் ராதிகா ப்ரீத்தி தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆனந்தராஜ் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகள் எல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய காமெடிகள் தான் படத்திற்கு ஆறுதல் என்றே சொல்லலாம். அந்த கால திரையரங்கம், ரஜினி -கமல் கட்டவுட்டுகள், மாட்டுவண்டி பயணம் என 80ஸ் காலத்தை கண் முன் நிறுத்திருக்கிறார் இயக்குனர்.

பின்னணி இசை எல்லாம் ஓகே, ஒளிப்பதிவு தான் படம் ஓரளவுக்கு தாக்குப் பிடித்திருக்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் சுருக்கிருக்கலாம். இயக்குனர் வழக்கமான தன்னுடைய காமெடி கான்செப்ட்டை பயன்படுத்தி இருந்தாலே படம் வெற்றி பெற்றிருக்கும். கொஞ்சம் அதிகமாக யோசித்து ஆபாசம் கொண்ட காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் கொண்டதுதான் படத்திற்கு மைனஸ் ஆகி இருக்கிறது. மொத்த படமே அண்ணன் தங்கை சவால் ஆகவே இயக்குனர் கொடுத்திருக்கிறார். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியமும் விறுவிறுப்பும் படத்தில் ஒன்றுமே இல்லை. மொத்தத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு இந்த படம் ரொம்ப ரொம்ப சுமார்

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்து இருக்கிறது

சில காமெடிகள் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

குறை:

இயக்குனர் கதைக்களம்

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

காமெடிகள் நன்றாக செய்து இருக்கலாம்.

இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச காட்சிகள் இருக்கிறது

மொத்தத்த்தில் 80ஸ் பில்டப்- மொக்கை

Advertisement