வைஷ்ணவி இறப்பிற்கு நான் காரணமா? முதல் முறையாக தேவ் ஆனந்த் அளித்த விளக்கம்.

0
895
- Advertisement -

நடிகை வைஷ்ணவி இறப்பு குறித்து எமோஷனலாக நடிகர் தேவ் ஆனந்த் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரை நடிகை வைஷ்ணவியை யாரும் மறக்க முடியாது. இவர் படங்களில் கூட நடித்து இருக்கிறார். வைஷ்ணவி கடந்த 2006-ம் ஆண்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

மேலும், வைஷ்ணவியின் தற்கொலைக்கு சின்னத்திரையில் அவருடன் பணியாற்றிய சக நடிகரான தேவ் ஆனந்த் தான் காரணம் என்று வைஷ்ணவியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்து இருந்தார்கள். அவர்கள் கொடுத்த புகாரில், `வைஷ்ணவியை, தேவ் ஆனந்த 2-வதாக திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், வைஷ்ணவி அவரது விருப்பத்தை நிராகரித்துவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த தேவ் ஆனந்த் வைஷ்ணவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்.

- Advertisement -

அவரது, துன்புறுத்தல் காரணமாகவே வைஷ்ணவி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி இருந்தார்கள். இதை அடுத்து போலீஸ் வழக்கு பதிவு செய்து தேவ்வை கைது செய்து இருந்தார்கள். பின் இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தேவ் ஆனந்த்.

நீதிமன்றம் உத்தரவு:

பின் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேவ் ஆனந்துக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து இருந்தது. மேலும், இது 2018ல் அளித்த தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை வைஷ்ணவியின் தற்கொலை குறித்து எமோஷனலாக தேவ் பேட்டி அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தேவ் பேட்டி:

அதில் அவர், என்ன நடந்தது என்று அவளுக்கும் எனக்கும் தான் தெரியும். சாட்சி சொல்ல வேண்டியவ உயிரோடும் இல்லை. நான் சொன்னால் மட்டும் நம்ப போறாங்களா? என்ன நடந்தது? என்று தெரியாமல் கமெண்ட் போடுவதற்கு யாருக்கும் அருகதையும், உரிமையும் தகுதியும் கிடையாது. எங்கள் இருவருக்கும் மட்டும்தான் என்ன நடந்தது என்று தெரியும்.

யாரும் காது கொடுத்து கேட்பதில்லை

அவள் உயிருடன் இல்லை. நான் சொன்னால் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது. அவன் பொய் சொல்கிறான் என்று சொல்வார்கள். இந்த உலகத்தில் வாழ்பவர்கள் சொல்வதை பொய் என்று தான் சொல்கிறார்களே தவிர அவர்கள் சொல்வதும் உண்மை என்று யாரும் காது கொடுத்து கேட்பதில்லை என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement