83 உலக கோப்பையை பார்க்காதவர்கள் பார்க்கவேண்டிய படம் – ’83’ படத்தின் முழு விமர்சனம்.

0
834
83
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து இருந்த 83 படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தினை கபீர் கான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோன், பங்கட் திரிபாதி, நீனா குப்தா, மொஹீந்தர் அமர்நாத், போமான் இரானி உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு அஸீம் மிஸ்ரா ஒளிப்பதிவு செய்து உள்ளார். படத்திற்கு பின்னணி இசை ஜூலியஸ் பாக்கியம் இசையமைத்து உள்ளார். பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி உள்ள 83 படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ’83’ படம் உருவாகியிருக்கிறது. இந்திய அணி 1983 ஆம் ஆண்டில் இந்திய தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க உலக கோப்பையை வென்றது. அந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் 83. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கும் இந்த உலக கோப்பையின் வெற்றி ஒரு முக்கிய காரணம். மேலும், கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டும் உலக கோப்பையும் :

மேலும், டோனி பெற்ற கோப்பை பலருக்கும் தெரியும். ஆனால், கபில்தேவ் கண்ட முதல் வெற்றி பலருக்கும் தெரியாத ஒன்று. அந்த சாதனையை மீண்டும் ரசிகர் கண்முன் கொண்டு வர இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து உள்ளார். கபில் தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடித்து இருக்கிறார். மேலும், இருவரும் திருமணம் முடிந்த பிறகு இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

83 படத்தில் நடித்துள்ள நடிகர்கள் :

ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்து உள்ளார். படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இங்கிலாந்தில் நடந்த புரூடென்ஷியல் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்றது முதல் உலக கோப்பையை வெல்வது வரையிலான நிகழ்வுகளை படத்தின் கதையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர். அதை பாலிவுட் பாணியில் பாடல்கள், உணர்ச்சிகரமான சம்பவங்கள் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கி இருக்கின்றார்.

-விளம்பரம்-

படம் துவங்கும் போது கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் பாஸ்போர்ட் மூலம் அறிமுகம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்திய அணி மீதும், இந்தியாவின் மீதும் நிலவும் அவநம்பிக்கை சொல்லப்படுகிறது. பின் அந்த காட்சியில் இருந்து படம் உச்சத்தை நோக்கி நகர்வதே கதை. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் இந்திய அணி மீது காட்டப்படும் அலட்சியம், அதனை மீறி இந்திய அணி ஒவ்வொரு போட்டியாக வென்று வரும் எதிர்கொள்ளும் சவால்கள் என அருமையாக வந்து இருக்கிறது.

கபில்தேவ் தான் ஹீரோ :

படத்தில் கபில்தேவ் உடைய அரையிறுதிப் போட்டி, மேற்கிந்திய தீவுகளுடன் அரையிறுதிப் போட்டி என அனைத்து காட்சிகளையும் அற்புதமாக வந்திருக்கிறது. மேலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவில் அமைந்திருக்கிறது. ஒரு இடங்களில் கூட சலிப்பு தட்டாமல் க்ளாப்ஸ்களை வாங்கியிருக்கிறது. இந்த படத்திற்கு 83 என்ற பெயர் வைத்ததற்கு பதிலாக கபில்தேவ் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.

அந்த அளவுக்கு படம் முழுக்க முழுக்க கபில் தேவை பற்றி தான் கதை நகர்கிறது. ரன்வீர் சிங்அவர்கள் கபில் தேவ் கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு இடத்தில் கூட ரன்வீர் சிங் தெரியாமல் கபில்தேவ் ஆகவே வாழ்ந்து இருக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவைக்கு ஸ்ரீகாந்தின் பாத்திரம் பயன்பட்டிருக்கிறது. படத்தில் அவருடைய நகைச்சுவை காட்சிகள் கைதட்டும் அளவிற்கு மிக அற்புதமாக அமைந்திருக்கிறது.

படத்தில் சின்ன சின்ன குறைகளை தாண்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான விருந்தாக 83 படம் அமைந்திருக்கிறது. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை தொடர்ந்து செய்திகளாகவும், சில வீடியோ தொடர்பிலும் இந்த தலைமுறைக்கு அந்த போட்டியை அந்த கால பின்னணியுடன் திரும்பக் கொண்டு வந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்று விருந்து வைத்து உள்ளார் இயக்குனர்.

நிறைகள் :

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

கபில்தேவ் கதாப்பாத்திரத்தில் ரன்வீர் சிங் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை கதையை அற்புதமாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர்.

83 படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து என்று சொல்லலாம்.

குறைகள் :

சின்ன சின்ன குறைகள் தான் படத்தில் உள்ளதை தவிர மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு பெரிய குறையும் இல்லை.

மொத்தத்தில் 83– கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து.

Advertisement