-விளம்பரம்-
Home விமர்சனம்

‘நண்பர்களுடன் சேர்ந்த பார்க்க ஒரு சிறந்த படம்’ – நண்பன் ஒருவன் வந்த பிறகு முழு விமர்சனம்

0
301

அறிமுக இயக்குனர் ஆனந்த ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்த படத்தில் மதன் கௌரி, பவனி ஸ்ப்ரே, பின்னி ஆலிவர்,வெங்கட் பிரபு, கஃய் பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. அனந்தி, ஆர்.ஜே. விஜய், பாலா, இர்ஃபான் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஹெச்.காசிப் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நண்பர்கள் வைத்து கதை வருவது குறைவு தான். அப்படியே வந்தாலும் சில படங்கள் வெற்றி அடைந்தாலும், சில படங்கள் தோல்வியில் முடிகிறது. அந்த வகையில் தற்போது நண்பர்கள் கதைக்களத்தை வைத்து இயக்குனர் ஆனந்த் இயக்கி, நடித்தும் இருக்கிறார். ஒரு சிறு பையனுடைய வாழ்க்கையில் நண்பர்கள் மூலம் நடக்கும் நிகழ்வை அடிப்படையாக வைத்துதான் இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

படத்தில் ஆனந்த் என்ற சிறுவன் ஆனந்தம் என்ற காலனியில் வசித்து வருகிறார். இங்கு இவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். அதை எப்படி அவர் கடைசிவரை தக்க வைக்கிறார். இவரின் நண்பர்கள் மூலம் இவருடைய வாழ்க்கை, கனவு எப்படி மாறுகிறது என்பது தான் படத்தின் கதை. ஹீரோ உடைய ஆரம்ப காலத்தில் தொடங்கி பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, பின் தன்னுடைய கனவுக்காக உழைக்கும் வேலை வாழ்க்கை என அனைத்தையுமே இயக்குனர் அழகாக சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் யூடியூப் மூலம் பிரபலமான நபர்கள் தான் படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆர்ஜே விஜய், தேவ் ஆகியோருடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. படத்திற்கு பின்னணி இசையும், ஒளிப்பதிவும் பக்க பலத்தை கொடுத்து இருக்கிறது. படத்தின் சில வசனங்கள் உணர்வுபூர்வமாக இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது இளைஞர்களின் வாழ்க்கை கதையை தான் இயக்குனர் காண்பித்திருக்கிறார். முதல் பாதி நன்றாக செல்கிறது. இரண்டாம் பாதி சுவாரசியத்துடன் இயக்குனர் சொல்லியிருப்பது பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது. இது இயக்குனர் உடைய முதல் படமே என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு கதைக்களத்தை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார். ஒரு பக்க எமோஷனல், என்டர்டைன்மென்ட் படமாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பார்வையாளர்களும் நல்ல பாசிட்டிவ்வான கருத்தை தான் கூறி வருகிறார்கள்.

நிறை:

கதைக்களம் அருமை

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

இரண்டாம் பாதி சூப்பராக இருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில இடங்களில் தேவையில்லாத காட்சிகளை நீக்கி இருக்கலாம்

படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் நண்பன் ஒருவன் வந்த பிறகு- வெற்றி

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news